Pakistan Earthquake 15 Dec 2023 (Photo Credit: @ANI X)

டிசம்பர் 14, பாகிஸ்தான் (World News): கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி - சிரியா எல்லையை மையமாக வைத்து ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம், 50,783 ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை பறித்தது. 15.73 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர், 4 மில்லியன் கட்டிடங்கள் சேதமடைந்தன, 3,45,000 அடுக்குமாடி குடியிருப்புகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின.

முன்னதாகவே கணித்தார்: இந்த நிலநடுக்கத்தை முன்னதாகவே டச்சு நிலவியல் ஆய்வாளர் பிராங்க் ஹூகர்பீட்ஸ் (Frank Hoogerbeets) என்பவர் கணித்திருந்தார். இந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் - இந்தியா - பாகிஸ்தானை மையமாகக் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என்றும் எச்சரித்து இருந்தார்.

ஆய்வாளரின் எச்சரிக்கை: இதனை உறுதி செய்யும் பொருட்டு கடந்த சில மாதங்களாகவே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்திய எல்லைப் பகுதியில் உள்ள இடங்கள், நேபாளம் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. Missing Eyeballs From Woman Corpse: இளம்பெண் சடலத்தில் கண்கள் மாயமான விவகாரம்: 2 அரசு மருத்துவர்கள் கைது., தொடரும் மர்மம்..! 

Philippines Indonesia Earthquake 15 Dec 2023 (Photo Credit: @EarthquakesApp / @ChileAlertaApp X)

ஆப்கானிஸ்தான், நேபாள நிலநடுக்கம்: கடந்த அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக, 2000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். அதேபோல, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.

3 நாடுகளில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கங்கள்: இந்நிலையில், இன்று காலை 09:13 மணியளவில் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகளில் 4.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்துள்ளது. அதேபோல, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் ரிக்டர் அளவுகோலில் முறையை 3.9, 3.7 அலகுகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அடுத்தடுத்த மிதமான நிலநடுக்கம் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற எண்ணம் மக்களிடையே மேலோங்கி அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.