ஏப்ரல் 29, ஒக்லஹாமா (World News): அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா (Oklahoma Tornado) மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளை கடந்த சில நாட்களாகவே கடுமையான சூறாவளி திடீரென தாக்கி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்துடன் தற்போது வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பருவகாலங்களில் இவை இயல்பு எனினும், திடீரென ஏற்படும் சூறாவளி மனித உயிர்களையும் பறிக்கிறது. Youths Getting Penalty: படியில் அமர்ந்து இரயிலில் சாகச பயணம்; இளைஞர்களுக்கு அபராதம் விதித்து ஆப்படித்த இரயில்வே காவல்துறையினர்.!
சில மணிநேரத்திற்குள் 18 செ.மீ மழை: ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள நெப்ராஸ்கா மற்றும் நோவா ஆகிய நகரங்களில் கடந்த 2 நாட்களுக்குள் சுமார் 78 சூறாவளிகள் தாக்குதல் நடத்தியுள்ளன. வடக்கு டெக்சர்ஸ், ஒக்லஹாமா, மிஸவ்ரி ஆகிய மாகாணங்களில் மொத்தமாக 35 சக்திவாய்ந்த சூறாவளிகள் தாக்கி இருக்கின்றன. சூறாவளியின் காரணமாக சில மணிநேரத்திற்குள் 18 செ.மீ மழை கொட்டித்தீர்த்து, பல இடங்களில் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. Cop Died an Accident: சாலை விபத்தில் காவலர் பரிதாப பலி.. சாலை தடுப்பில் மோதி நொடியில் பறிபோன உயிர்.. பதறவைக்கும் காட்சிகள்.!
44 ஆயிரம் வீடுகளில் மின்னிணைப்பு துண்டிப்பு: சூறாவளியின் வேகத்தில், அதன் கண்ணில் படும் இடங்களில் இருக்கும் பள்ளிக்கூடம், கட்டிடங்கள், வீடுகள், கார்கள் போன்றவையும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தடுத்த பயங்கர சூறாவளியின் காரணமாக, 5 பேர் தற்போது வரை பலியாகி இருக்கின்றனர். இந்த சூறாவளிகளால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று டெக்ஸாஸில் 25000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒக்லஹாமா மாகாணத்தில் 19000 வீடுகள் இருளில் மூழ்கின.
A tornado ripped through Marietta, Oklahoma, destroying a Dollar Tree distribution center and flipping semis. #OKwx pic.twitter.com/D0rAjfi6vq
— AccuWeather (@accuweather) April 28, 2024
சூறாவளியின் தாக்கம்:
Catastrophic damage in Sulphur, Oklahoma, after an overnight tornado. #OKwx pic.twitter.com/Pq8LmRUSCC
— AccuWeather (@accuweather) April 28, 2024