ஏப்ரல் 29, மேட்டுப்பாளையம் (Coimbatore News): கோயம்புத்தூர் - மேட்டுபாளையத்தை (Coimbatore to Mettupalaiyam Train) இணைக்கும் வகையில், தென்னக இரயில்வே சார்பில் இஎம்யு பயணிகள் இரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரயிலில் கோவைக்கு வரும் உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இதன் வாயிலாக மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகள், அங்கிருந்து ஊட்டி, நீலகிரிக்கு பயணிப்பார்கள். இந்நிலையில், கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் பயணம் செய்த இரயிலில், இளைஞர்கள் குழு ஒன்று ஆபத்தான வகையில் படியில் அமர்ந்து பயணம் செய்தது. இதுகுறித்த சம்பவம் கடந்த 28ம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த வீடியோ வெளியாகவே, மேட்டுப்பாளையம் இரயில்வே காவல் துறையினர் இளைஞர்களை அடையாளம் கண்டு அபராதம் விதித்தனர். மேலும், படியில் அமர்ந்துகொண்டு பயணம் செய்யக்கூடாது எனவும் அறிவுரை வழங்கி இளைஞர்களை அனுப்பி வைத்தனர். Cop Died an Accident: சாலை விபத்தில் காவலர் பரிதாப பலி.. சாலை தடுப்பில் மோதி நொடியில் பறிபோன உயிர்.. பதறவைக்கும் காட்சிகள்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)