டிசம்பர் 12, கலிபோர்னியா (World News): கடந்த அக்டோபர் 07ம் தேதி இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட தனது தாய் நாட்டின் எஞ்சிய பகுதிகளை மீட்கப்போவதாக கூறி, பாலஸ்தீனிய பகுதியைச் சார்ந்த ஹமாஸ் குழுவினர் ஆயுதமேந்தி இஸ்ரேலுக்கு எதிராக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். அன்றைய நாளில் திடீர் தாக்குதலாக இஸ்ரேல் நகரை நோக்கி பல வான்வழி தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டது.
போரை தொடங்கிய ஹமாஸ்: அல்லாக் அக்பர் என்ற முழக்கத்தை முன்வைத்தவாறு இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் - பாலஸ்தீனிய எல்லைப்பகுதியில் இருக்கும் நகரங்களில் யூத மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சிக்கிய அப்பாவி பொதுமக்களின் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து, களத்தில் இறங்கிய இஸ்ரேல் அரசு தனது இராணுவத்தை முழு அளவில் முடுக்கிவிட்டது.
போரை தொடங்கிய ஹமாஸால் பலத்த சேதத்தை சந்தித்த பாலஸ்தீனியம்: பாலஸ்தீனியத்தின் காசா நகரில் வான்வழி தாக்குதல் முழுவீச்சில் தொடரும் என்பதால், மக்கள் அங்கிருந்து வெளியேறவும் அறிவுறுத்தியது. போரை ஹமாஸ் தொடங்கினாலும், அதன் இறுதிக்கட்டத்தை எழுதும் வலிமையில் இருந்த இஸ்ரேல், தனது விமானப்படை உதவுடன் காசா நகரில் குண்டு மழையினை பொழிந்தது. இதனால் தற்போது வரை பாலஸ்தீனிய மக்கள் 18,000 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இஸ்ரேலின் அதிர்ச்சி செயல்: பதில் தாக்குதல் குறித்து அறிவிப்பு வெளியிட்டு இஸ்ரேல் போரை முன்னெடுத்தபோதிலும், பாலஸ்தீனிய மக்கள் குடியிருப்பு அப்பகுதியில் குண்டுகள் விழாது என சிலர் அங்கேயே இருந்தனர். ஆனால், பல தரைமட்டமான கட்டிடங்களில் கூட்டமாக இருந்த மக்களே அதிகளவில் உயிரிழந்தனர். போரின் துயரத்தை வெளிப்படுத்தும் விதமாக பல வீடியோ வெளியானதால், அமெரிக்காவும் ஒரு சூழ்நிலையில் இஸ்ரேலை கண்டித்து. HBD Rajinikanth: தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம், ஸ்டைல் மன்னன் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று.!
கொடூர கொலைகள் செய்த ஹமாஸ்: ஹமாஸ் பயங்கரவாதிகள் தொடக்கத்தில் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து 1400 மக்களை கொன்று குவித்தனர். பதிலடியில் பாலஸ்தீனியம் பேரழிவை சந்தித்து, அங்குள்ள மக்கள் தாங்கள் படும் இன்னல்களை வீடியோவாக வெளியிட்டனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக பல உலக நாடுகள் இருந்தாலும், அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி உதவி செய்தது. பாலஸ்தீனிய மக்கள் கடும் துயரங்கள் உலகளவில் பலரின் மனதையும் பதறவைக்கவே, இந்தியா உட்பட பல நாடுகள் அங்குள்ள மக்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தது.
உலக நாடுகளின் உதவி: எகிப்தில் இருந்து தரை மார்க்கமாக மீட்பு பொருட்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்கு இஸ்ரேலிய அரசும் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒட்டுமொத்தமாக ஒழிக்காமல் நாங்கள் ஓயமாட்டோம் என அதிபர் பெஞ்சமின் எச்சரித்து, தற்போது பிணையக்கைதிகள் பரிமாறப்படுவதால் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பதற்றமான சூழ்நிலை: மத்திய கிழக்கில் போரின் காரணமாக பதற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பல நாடுகளில் வசித்து வரும் இஸ்ரேல், பாலஸ்தீனிய நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து போராட்டத்தை தொடங்கினர். சில இடங்களில் மோதல் சம்பவங்களும் நடைபெற்றன.
இனவெறுப்பு பிரச்சனை: இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், ஓக்லாண்ட் (Oakland) நகரில் உள்ள தனியார் உணவகத்தில், உணவு சாப்பிட வருகை தந்த இஸ்ரேல் நாட்டைச் சார்ந்த யூத மத பெண்மணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், அவர் அங்குள்ள கழிவறையை தான் உபயோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தும், அவரை அனுமதிக்க மறுப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியேற்றினர். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசும் நபர், இஸ்ரேல் ஒரு இடத்தில் இருந்துகொண்டு, பின்னாளில் அதனை உரிமை கொண்டாடும் என்பதை போலவும் கூறினார்.
SJW employees at Farley’s East in Oakland, CA prohibit Jewish customers from using the bathroom after graffiti such as “zionism = fascism” is written on the walls. Boycott Farley's and any other business that supports terrorism. pic.twitter.com/JeSg8gRzbu
— Billy Ridgeway (@Billoncho777) December 8, 2023