டிசம்பர் 12, சென்னை (Chennai): தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம், ரசிகர்களால் தலைவா, தலைவர், மனித கடவுள், சூப்பர்ஸ்டார் என பல்வேறு புனைபெயர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth). கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ள ஓசூர் அருகேயுள்ள கிராமத்தில், மராட்டிய குடும்பத்தில் பிறந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று தமிழ் திரையுலகத்தில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
உழைப்பால் உயர்ந்த நாயகன்: தனது வாழ்க்கையில் கூலித்தொழிலாளியாக, பேருந்து நடத்துனராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த், திரைத்துறை மீது கொண்ட ஆர்வத்தால் சென்னை வந்து, பல கஷ்டங்களை கடந்து இன்று தன்னை சூப்பர்ஸ்டாராக உயர்த்தி இருக்கிறார். இவரின் சிறுவயதில் சந்தித்த பிரச்சனைகள், திரைப்பட வாழ்க்கையின் தொடக்கத்தில் பலரின் விமர்சனத்தை எதிர்கொண்டது போன்றவை குறித்து அவ்வப்போது பொதுமேடைகளில் பேசுவதும் வழக்கம். Turkmenistan Fire Hole: 52 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் பள்ளம்: நரகத்தின் வாயிலாக வேடிக்கை பார்க்கும் சுற்றுலா பயணிகள்.!
சோதனையை கடந்தால் தான் சாதனை: தனது வாழ்நாட்களில் கஷ்டப்பட்டால் மட்டுமே உயர்வு இருக்கும் என்பதை கூறி, ரசிகர்களையும் - பொதுமக்களையும் கஷ்டத்தை கடந்து உழைத்து முன்னேற அறிவுரை வழங்குவார். கடந்த 50 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் பணியாற்றி வரும் ரஜினிகாந்தின் பணியை பாராட்டி, மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்தது.
வெளிநாடுகளிலும் ரசிகர் கூட்டம்: அதேபோல, தமிழ் மொழி படங்கள் எம்.ஜி.ஆருக்கு பின் ரஜினியின் ஸ்டைலுக்காக கடல்கடந்து சீனா, ஜப்பான், மலேஷியா உட்பட பல நாடுகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜப்பானில் ரஜினிக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஒவ்வொரு ரஜினி பட ரிலீஸின்போதும், அவர்கள் அங்கிருந்து இங்கு வந்து படம் பார்த்து செல்வதும் நடக்கிறது. Negative Thought in Mind: மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை அகற்றுவது எப்படி?.. மன ஆரோக்கியம் மேம்பட இதை செய்து பாருங்கள்.!
ஸ்டைல் மன்னன்: 170 படங்களில் நடித்துவிட்ட ரஜினிகாந்த், டி.ஜெ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 171வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். லால் ஸலாம் திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தை, ரஜினிகாந்த் தனது ஸ்டைலால் இன்று வரை நிலைநிறுத்தி இருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியான பல படங்கள் 100 நாட்கள், 200 நாட்களை கடந்து ஓடி, வசூல் ரீதியாக மாபெரும் சாதனைகள் செய்ததே அதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.
பிறந்தநாள்: 1975ல் அபூர்வ ராகங்களில் தொடங்கிய ரஜினியின் ஓட்டம், இன்று வரை உச்சத்திலேயே நகர்ந்து வருகிறது. துறை ரீதியாக அவரை வீழ்த்த நினைத்த பலருக்கும், அவரின் சாதனைகளை பதில் பரிசாக வழங்கிய நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று பிறந்தநாள். அவர் தனது 73வது வயதில் அடியெடுத்து வருகிறார். ரஜினியின் ரசிகர்களும், திரையுலகினரும், அரசியல் கட்சி பிரமுகர்களும் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.