மார்ச் 26, வியட்நாம் (World News): சர்வதேச அளவில் மக்கள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் ஏற்படும் தட்ப வெப்பநிலை மக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கிறது, புதிய நோய்களை உண்டாக்க காரணமாகவும் அமைகிறது. கொரோனாவுக்கு பின்னர் இச்சூழ்நிலை மக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கி வருகிறது. இந்நிலையில், வியட்நாமில் உள்ள கான்ஹ் ஹோஆ மாகாணத்தில் வசித்து வரும் 21 வயது கல்லூரி மாணவர், பறவைக்காய்ச்சல் (Bird Flu Vietnam) காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யட்புள்ளது. கல்லூரி மாணவர் நா ட்ரங் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். சமீபத்தில் அவர் சொந்த ஊர் வந்திருந்தார். அங்கு திடீர் உடல்நலக்குறைவை எதிர்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கல்லூரி மாணவரின் மரணத்தில் உறுதி: இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நடந்த சோதனையில் பறவைக்காய்ச்சல் காரணமாக மாணவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதனால் பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் அபாயம் வியட்நாமில் ஏற்பட்டு இருக்கிறது. Bus Driver Sex in Public Place: பேருந்து ஓரமாக பொதுஇடத்தில் கூச்சமின்றி உல்லாசம்; புகைப்பட ஆதாரத்துடன் சிக்கிய ஓட்டுநர்.!
பறவைகளை பிடிக்க சென்றபோது வைரஸ் பரவியிருக்கலாம் என அச்சம்: இதனால் அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் சுகாதாரத்துறையினர் முடுக்கி விடப்பட்டு, நோய்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது வரை அங்குள்ள 6 மாகாணங்களின் பல்வேறு நகரங்களில் 6 விதமான பறவைக்காய்ச்சல் பரவி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த மாணவருக்கு H5N1 ரக பறவைக்காய்ச்சல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த கல்லூரி மாணவர், பறவைகளை பிடித்துக்கொண்டு இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். புதிய சந்திர ஆண்டுக்கான அவர் பறவைகளை பிடித்தபோது, நோயுள்ள பறவையிடம் இருந்து அவருக்கு பறவைக்காய்ச்சல் பரவி இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நோய்வாய்ப்பட அறிகுறி உள்ளவர்கள் அனைவரும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.