
பிப்ரவரி 22, கொட்டாரக்கரை (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள கொட்டாரக்கரை (Kottarakkara), என்.ஜி சாலை பகுதியில் வசித்து வருபவர் மோகன் பிள்ளை. இவர் நேற்று காலை சுமார் 10 மணியளவில், பிரதான சாலை பகுதிக்கு தனது ஸ்கூட்டியுடன் வந்தார். அப்போது, சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அதே சாலையில், எதிர்திசையில் மினி கனரக லாரி ஒன்று வந்தது. இருசக்கர வாகனத்தில் இருந்தவர், அலட்சியமாக சாலையை கடக்க முற்பட்டார். இதனால் லாரியின் மீது அவரின் வாகனம் நேரடியாக மோதி, லாரி வந்த வேகத்தில் இருசக்கர வாகனத்தை இழுத்து சென்று, வீடு ஒன்றின் சுவரில் மோதி நின்றது. Doctor Drowned in River: 'ரீல்ஸ்' மோகத்தால் விபரீதம்; ஆற்றில் குதித்த பெண் மருத்துவர் சடலமாக மீட்பு..!
அலட்சியமான செயலினால் நேர்ந்த சோகம்:
நொடிப்பொழுதில் நடந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மோகன் பிள்ளை, உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவர் லாரியின் பிடியில் இருசக்கர வாகனத்துடன் இழுத்து செல்லப்பட்டு மரணித்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோகனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்த நிலையில், விபத்தின் பதைபதைப்பு சிசிடிவி கேமிராவில் அதிர்ச்சி காட்சிகளும் பதிவாகி வெளியாகியுள்ளன.
பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் இதோ:
ஸ்கூட்டியில் கிராஸ் செய்த நபர்...லாரி அடியில் சிக்கியதால் அதிர்ச்சி - பதைபதைக்க வைக்கும் காட்சிகள்#kerala | #Accident pic.twitter.com/GgpsmTn4gB
— Thanthi TV (@ThanthiTV) February 22, 2025