ஜூலை 02, மிசௌரி (World News): அமெரிக்காவில் உள்ள மிசௌரி மாகாணம், செயின்ட் லூயிஸ் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் படித்து வருபவர் கிரண் குமார் ராஜு ஸ்ரீ நடராஜு (வயது 20). இவர் கடந்த நவம்பர் 2023ல் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தார். இதனிடையே, கடந்த ஜூன் 28ம் தேதி நண்பர்களுடன் இருந்த கிரண், அங்குள்ள 8 அடி ஆழமுள்ள குளத்தில் குளித்துள்ளார்.
நீச்சல் தெரியாததால் சோகம்:
அவருடன் சக நண்பர்கள் இருந்தாலும், யாருக்கும் நீச்சல் தெரியாது. இதனிடையே, குளத்தில் குளித்துக்கொண்டு இருந்த கிரண் நீரில் மூழ்கி தத்தளித்து இருக்கிறார். தன்னை காப்பாற்றக்கூறியும் கூக்குரலிட்டுள்ளார். இதனால் பதறிப்போன நண்பர்கள் செய்வதறியாது திகைத்த நிலையில், அவர்கள் அவசர உதவிக்கு அழைத்துள்ளனர். அவர்களுக்கும் நீச்சல் தெரியாத காரணத்தால், அவர்கள் கிரணை காப்பாற்ற இயலவில்லை. Indian Origin Manpreet Kaur Dies: 4 ஆண்டுகள் கழித்து குடும்பத்தை பார்க்க சடலமாக இந்தியா வந்த 24 வயது இளம்பெண்.. நொடியில் நடந்த சோகம்.!
கரையில் இருந்தவாறு நண்பனை காப்பாற்றக்கூறி அலறி இருக்கின்றனர். இதனிடையே, தகவல் அறிந்து மீட்பு படையினர் வருவதற்குள் நீரில் மூழ்கிய கிரண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து இந்தியாவில் உள்ள அவரின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஹைதராபாத்தை சேர்ந்த மாணவர்:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், கல்லூரி மண்டலம், சின்ன கொருகொண்டி பகுதியை சேர்ந்த கிரண் குமார், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் DovWeb எனப்படும் தொழில்நுட்ப பயிற்சியை முடித்ததாக லிங்க்ஏடின் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். அவரின் தந்தை லட்சுமண் முன்னதாகவே உயிரிழந்துவிட்ட நிலையில், தாயார் மற்றும் கிரணின் தாத்தா குடும்பத்துடன் அவர் வசித்து வந்துள்ளார்.
மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற கிரணின் கல்விச்செலவுகள் அனைத்தையும் அவரின் தாத்தா மற்றும் குடும்பத்தினர் கவனித்துக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் கிரணின் குடும்பத்தார் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடலை தாயகம் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் சிகாகோ தூதரக அதிகாரிகள், கிரணின் குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துள்ளனர்.