Iran Flag | Smartphone | File Pic (Photo Credit: Pixabay)

அக்டோபர் 13, டெஹ்ரான் (World News): மத்திய கிழக்கு (Middle East Conflict) நாடுகளில் இஸ்ரேல் - பாலஸ்தீனியம் போர் உச்சகட்டத்தன்மையுடன் நடந்து வருகிறது. இஸ்ரேல் பாலஸ்தீனியத்தை (Israel Palestine) சேர்ந்த ஹமாஸ் குழுவினருக்கு (Hamas Group) உதவி செய்த, அடைக்கலம் கொடுத்த நாடுகளுக்கு சென்று ஹமாஸ் படைக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறது. இதனால் லெபனானில் இருந்தவாறு ஹிசாபுல்லா அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர்.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா, ஹமாஸுக்கு மத்திய கிழக்கு நாடுகள் உதவி:

இதனால் ஹிசாபுல்லா அமைப்புக்கு எதிராகவும் போர்தொடுத்த இஸ்ரேல், இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் குழுவை சேர்ந்த முக்கியப்புள்ளி ஈரானில் வைத்து கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரான் இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்திற்கு உரிய பதிலடி வழங்கப்படும் என இஸ்ரேல் தரப்பு எச்சரித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக போரில் அமெரிக்கா நேரடியாக களமிறங்கவில்லை எனினும், ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்து வருகிறது. Trichy Sharjah Flight: நடுவானில் பயணிகளுக்கு கிலி காண்பித்த விமான பயணம்; திருச்சியில் புறப்பட்ட விமானம் தப்பியது எப்படி?.. விபரம் உள்ளே.! 

ஏமனின் ஹவுதி கிளர்ச்சி படை தாக்குதல்:

இஸ்ரேலுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடந்தால், வான்வழி அமைப்பை கொண்டு அதனை தகர்க்குமாறும் அமெரிக்கா தனது இராணுவ வீரர்களுக்கு கட்டளையிட்டுள்ளது. சிரியாவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. ஏமனில் இருந்து செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சி அமைப்பு, செங்கடலில் இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பலை தாக்கி அழித்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பதற்றம், மூன்றாம் உலகப்போரின் அச்சத்துடன் நகருகிறது.

பேஜர்கள் மூலம் தாக்குதல்:

சமீபத்தில் லெபனானில் பேஜர், வாக்கி-டாக்கி போன்ற சாதனங்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். சுமார் 37 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் பேஜருக்கு வரும் அலை வரிசைகளை கண்டறிந்து, அதனை தொழில்நுட்ப ரீதியாக தாக்குதல் நடத்தி வெடிக்கச் செய்தது தெரியவந்தது.

ஈரான் அரசு பாதுகாப்பு நடவடிக்கை:

இதனால் ஈரான் நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம், பேஜர், வாக்கி-டாக்கி போன்ற மின்னணு சாதனங்கள் விமான கேபின், செக்-இன் பேக்கேஜில் அனுமதி செய்யப்படாது என அறிவித்துள்ளது. இதனால் விமானத்தில் பயணிகள் மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் மட்டுமே அவர்களால் எடுத்து செல்லப்பட முடியும். உள்நாட்டு அளவிலான விமான பயணிகளிடையே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.