Mohammad Mokhber (Photo Credit: @Forbes X)

மே 21, அஜர்பைஜான் (World News): ஈரானிய நாட்டின் அதிபரான இப்ராஹிம் ரைசி (Ibrahim Raisi), நேற்று மேற்கு அசர்பைஜான் பகுதியில் இராணுவ ஹெலிகாப்டரில் சென்றுகொண்டு இருந்தார். அச்சமயம் ஹெலிகாப்டர் திடீரென விபத்திற்குள்ளானது. விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் மீட்புப் படையினர் அங்கு விரைந்தனர். அங்குப் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் முதலில் விமானம் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து மீட்புப் படையினர் அனைவரும் நடந்து சென்றே மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. தொடர்ந்து இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்தில் சிக்கியதும் அதில் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது. மேலும், அவரது உடலையும் மீட்புப் படையினர் மீட்டனர். National Anti-Terrorism Day 2024: ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்.. தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம்..!

இந்த நிலையில் ஈரானின் முதல் துணை அதிபராக செயல்பட்டுவந்த முகமது மொக்பர் (Mohammad Mokhber) இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஈரான் நாட்டின் மூத்த தலைவர் பொறுப்பை கவனித்து வரும் ஆயத்துல்லா அலி காமெனி அறிவித்துள்ளார். ஈரானின் அரசியலமைப்பு படி நாட்டின் அதிபர் உயிரிழந்தால், துணை அதிபர் அப்பதவியை ஏற்பார். மேலும் 50 நாட்களில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்படும்.