Iraq Shopping Mall Fire Accident (Photo Credit : @thenewregion X)

ஜூலை 17, ஈராக் (World News): மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈராக்கின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அல்-குட் நகரில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஹைப்பர் மார்க்கெட்டின் 5 மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் பதறி ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மக்களை மீட்டு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Breaking: பள்ளி பேருந்து ஓட்டுநர் உயிர்நாடியில் மிதித்தே கொலை.. நாமக்கல்லில் பதற்றம்.! 

பயங்கர தீ விபத்து :

இந்த பயங்கர தீ விபத்தில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் 59 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களை பதற வைத்துள்ளது.

ஈராக்கின் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வீடியோ :