Imran Khan With Wife Bushra Bibi (Photo Credit: @IANS X)

ஜனவரி 31, இஸ்லாமாபாத் (World News): பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan), முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி ஆகியோர் அரசு ரகசியங்களை வெளியிட்டதாக 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில், அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானிய தூதர் அனுப்பிய ரகசிய தகவல்களை இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி ஆகியோர் வெளியிட்டது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டில் விசாரணை நடத்தப்பட்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

அஸ்தமனமாகும் இம்ரானின் அரசியல் வாழ்க்கை: ஏற்கனவே ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இம்ரான் கானுக்கு, இது அடுத்த பேரெதிர்ச்சி செய்தியாக இருந்தது. இதன் வாயிலாக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்ஷாப் கட்சியின் அஸ்தமனம் நடந்துள்ளதாக அங்குள்ள அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இம்ரான் கான் பிரதமராக இருக்கும்போது வழங்கப்பட்ட பரிசு பொருட்களை மறைத்ததாக, அவரது மனைவியின் மீது தோஷகானா (Toshakhana Case) வழக்கு நடைபெற்று வந்தது. Girl Suicide: 18 வயது இளம்பெண் பலாத்கார முயற்சி; பணியிடத்தில் நடந்த சோகம்.. தற்கொலை செய்து உயிரை மாய்த்த இளம்பெண்.! 

Imran Khan (Photo Credit: Facebook)

இம்ரானின் மூன்றாவது மனைவிக்கு சிறை தண்டனை: தற்போது இந்த வழக்கின் தீர்ப்பும் வெளியாகியுள்ள நிலையில், நீதிபதி அமீர் பாரூக் இம்ரான் கானின் மனைவி புஸ்ரா பிபிக்கு (Bushra Bibi) 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். இம்ரான் கானுக்கு எதிரான அடுத்தடுத்த தீர்ப்புகள் அவரின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமனத்தை நோக்கி நகர்த்தி இருக்கிறது. பிப்ரவரி 8ம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கையை முற்றிலும் காலி செய்யும் விதமாக அடுத்தடுத்த தீர்ப்புகள் வெளியாகி இருக்கின்றன. பிபி இம்ரான் கானின் மூன்றாவது மனைவி ஆவார். கடந்த 2018ல் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.