Chess Federation India Statement | Chess Board (Photo Credit: @ANI / Wikipedia Commons)

அக்டோபர் 13, புதுடெல்லி (Sports News): இஸ்ரேல் நாட்டை கைப்பற்றும் நோக்கில், பாலஸ்தீனிய நாட்டில் இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் பல்முனை தாக்குதலை இஸ்ரேலுக்கு எதிராக முன்னெடுத்து இருக்கின்றனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் இருக்கின்றன. அமெரிக்கா இஸ்ரேலுக்கு தொடர்ந்து தனது ஆயுதங்களை வழங்கி வருகிறது.

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாலஸ்தீனியம், பயங்கரவாதிகளுக்கு மறைமுக உதவி செய்த ஈரான் என தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றன. இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் ஆபரேஷன் அஜய்யின் கீழ் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவின் ஏர் இந்திய நிறுவனம் உட்பட பல்வேறு விமான நிறுவனங்கள் மத்திய கிழக்கில் தங்களின் விமான சேவையை முற்றிலுமாக தவிர்த்துள்ளது. மீட்பு விமானங்களும் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ள அமெரிக்கா தனது குடிமக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. Tiger 3 Trailer: சல்மான் கானின் டைகர் 3 படத்தின் டிரைலர் வெளியீடு தேதி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

இந்நிலையில், எகிப்து (Sharm el Sheikh, Egypt) நாட்டில் உள்ள ஷர்ம் எல் ஷேக் நகரில் நடைபெறவிருந்த உலக கேட்ட செஸ் சாம்பியன்ஷிப் (World Cadet Chess Championship 2023) போட்டியில் இருந்து இந்தியா விலகிக்கொண்டுள்ளது. ஏனெனில் எகிப்தின் ஷர்ம் நகரில் இருந்து 350 கி.மீ தொலைவில் தான் பாலஸ்தீனிய காசா நகரம் அமைந்துள்ளது.

காசா நகரில் இஸ்ரேல் அரசு குண்டுமழையை பொழிந்து வரும் நிலையில், அங்கிருக்கும் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து இருக்கின்றனர். காசா மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு படையெடுத்துள்ளனர். இவர்களுடன் பயங்கரவாதிகளும் அண்டை நாட்டிற்கு சென்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. UP Businessman Shot Dead: கண்ணிமைக்கும் நேரத்தில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்: நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட தொழிலதிபர்..!

ஒருவேளை ஹமாஸ் பயங்கரவாதிகளால் இந்திய விளையாட்டு வீரர்களின் உயிருக்கு அச்சம் ஏற்படக்கூடும் என்ற காரணத்தால், அகில இந்திய செஸ் கூட்டமைப்பு எகிப்தில் நடைபெறும் போட்டியில் இருந்து விலகிக்கொண்டுள்ளது.

மேற்படி பயணத்திற்கு தயாராக இருந்தவர்கள் மற்றும் அதற்கான தொகையை செலுத்தியோருக்கு, அவர்கள் செலுத்திய பணம் அப்படியே திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தில் அக்.14 முதல் அக்.23 வரை உலக கேட்ட செஸ் போட்டிகள் நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.