Fuad Shukr | IDF Spokesman Brig. Gen. Daniel Hagari (Photo Credit: @IDF X)

ஜூலை 31, பெய்ரூட் (World News): இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனியம் (Israel Hamas War) ஆதரவு ஹமாஸ் குழுவினர் (Hamas Terrorist) நடத்திய போர் காரணமாக, மத்திய கிழக்கில் (Middle East Countries) பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஹமாஸ் குழுவுக்கு ஈரான், ஏமன் உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் அளிக்கும் ஆதரவில் ஹமாஸ் தொடக்கத்தில் தாக்குதலை முன்னெடுத்தது.

39,000 க்கும் அதிகமானோர் பலி:

போரில் இஸ்ரேல் களமிறங்கியதும் பல ஆண்டுகளுக்கு பாலஸ்தீனியம் நாடு எழ இயலாத அளவு மரண அடி கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தரப்பில் போரின் தொடக்கத்தில் 1400 பேர் கொல்லப்பட்டனர், 100 க்கும் மேற்பட்டோர் பிணையக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர். இஸ்ரேல் தரப்பில் நடத்தப்பட்ட பதில் தாக்குதலில், தற்போது வரை 39000 க்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் குழு வேட்டையாடப்படுகிறது:

இஸ்ரேலுக்கு முதலில் ஆதரவாக இருந்த அமெரிக்கா, தற்போது போரை கைவிடுமாறு கண்டித்து வருகிறது. ஆனால், ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்காமல் நாங்கள் ஓயமாட்டோம் என இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீனியத்தில் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த காரணமாக இருந்த ஹமாஸ் அமைப்பின் முக்கியப்புள்ளிகள் தேடித்தேடி வேட்டையாடப்படுகின்றனர். Indian Students Killed In Canada: கனடாவில் நடந்த பயங்கர கார் விபத்து.. 3 இந்திய மாணவர்கள் பலி..! 

முக்கிய கமாண்டர் கொலை:

இந்நிலையில், நேற்று இரவு இஸ்ரேல் இராணுவம் லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் நகரின் மீது தாக்குதலை முன்னெடுத்தது. கடந்த ஆண்டு அக்.08 தாக்குதலுக்கு முக்கியப்புள்ளியாக இருந்து, இஸ்ரேலின் வடக்கு பகுதியில் கடந்த வாரம் 12 குழந்தைகளை கொலை செய்த ஹமாஸ் கமாண்டர் பவூட் ஷுகுர் சையத் முஸ்கன் என்ற நபரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் வெற்றிபெற்று சையத்தை கொன்றது. இந்த தகவலை அந்நாட்டின் இராணுவம் உறுதி செய்துள்ளது. ஷுகுர் சையத் கடந்த 30 ஆண்டுகளாக ஹிஸ்புல்லா பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பாளர், துல்லிய தாக்குதலில் அவர் உயிரிழந்தார் எனவும் இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

ஈவு இரக்கமின்றி கொன்ற ஹமாஸுக்கு பதிலடி:

போரின் தொடக்கத்தில் ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் எல்லைக்குள் சென்று கண்ணில் படுவோரையெல்லாம் சுட்டுத்தள்ளி, வீடுவீடாக சென்று குழந்தைகள், பெண்கள் ஈவு இரக்கமின்றி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்து, தலைகளை அடுக்காக மேஜைகளில் வைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதற்குப்பின்னரே இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்தது.