Israeli Hostage Retuned Israel, Met With Family (Photo Credit: X)

நவம்பர் 27, இஸ்ரேல் (World News): கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையேயான (Israel Hamas War) போர், தற்போது வரை நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கடந்த பின் போர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிடிக்கப்பட்ட பிணையக்கைதிகள் தொடர்ந்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பினும், ஹமாஸ் பயங்கரவாதிகள் அனைவரையும் ஒழிக்காமல் இஸ்ரேல் அமைதியாகாது என இஸ்ரேலிய அதிபர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். போரின் தொடக்கத்தில் இஸ்ரேல் தரப்பில் 1300 மரணங்கள் ஏற்பட்டு இருந்தன. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய மக்களை தலை துண்டித்து வயது வித்தியாசமின்றி கொலை செய்து இருந்தனர்.

பதில் தாக்குதலில் களமிறங்கிய இஸ்ரேலிய அரசு, காசா நகரம் முழுவதுமாக தரைமட்டமாக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறிக்கொள்ள கால அவகாசம் வழங்கியது. பின் காசா நகரம் குண்டு மழைகளில் நனைந்து தரைமட்டமானது. இதனால் பாலஸ்தீனியத்தின் தரப்பில், 14,500க்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டுள்ளன. Karthigai Deepam Fire Accident: அகல்விளக்கால் ஏற்பட்ட சோகம்: கார், இருசக்கர வாகனங்கள் தீக்கு இரையான பரிதாபம்.!

Israeli Hostage Maya Regev (Photo Credit: X)

தற்போது வரை இரண்டு கட்டங்களாக 50க்கும் மேற்பட்ட பிணையக்கைதிகள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில், இஸ்ரேலை சார்ந்த மாயா ரேகேவ் (Maya Regev) என்ற பெண்மணி ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, நேற்று விடுவிக்கப்பட்டார்.

அவர் நோவா இசைத்திருவிழாவில் கலந்துகொள்ள சென்றிருந்த நிலையில், அங்கிருந்து பயங்கரவாதிகள் மாயாவை கடத்திச்சென்றனர். கிட்டத்தட்ட 50 நாட்கள் கடந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். பிணையக்கைதியாக பிடிக்கப்பட்ட மாயாவை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொடுமைப்படுத்திய நிலையில், அவர் தனது கால்களில் காயத்துடன் இஸ்ரேலுக்கு திரும்பியிருக்கிறார்.

அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், குடும்பத்தினர் அவரின் நிலையை கண்டு மருத்துவமனையில் கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் நடந்துள்ளது. அவர் தற்போது உடல் நலத்துடன் இருப்பதாகவும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.