
பிப்ரவரி 21, மணிலா (World News): பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் (Manila) டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், கொசுவை (Mosquito) உயிருடனோ அல்லது கொன்றோ கொண்டு வந்து தந்தால் 5 கொசுவுக்கு ரூ. 1.50 சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனால், 'பொதுமக்கள் வீட்டில் அதிக தண்ணீரை தேக்கி வைத்து கொசுவை உற்பத்தி செய்வார்கள். மேலும் தொற்று பாதிப்பு அதிகரிக்குமே தவிர எந்த பலனும் இல்லை' என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். White House Shares 'ASMR' Video: சட்டவிரோதமாக குடியேற நினைத்தால்.. வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா..!
கொசுவை பிடித்தால் சன்மானம்:
இதுவரை மொத்தம் 21 பேர் வெகுமதியைப் பெற்றுள்ளனர். 700 கொசுக்களை மக்கள் கொண்டு வந்துள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டெங்குவை (Dengue Fever) எதிர்த்துப் போராடுவதில், உள்ளூர் அரசாங்க நிர்வாகிகளின் நல்ல நோக்கங்களைப் பாராட்டுகிறோம் என்று பிலிப்பைன்ஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தெருக்களை சுத்தம் செய்தல் மற்றும் டெங்கு பரப்பும் கொசுக்கள் முட்டையிடும் இடங்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகளை தீவிர படுத்த, இந்த பரிசுத் தொகை வழங்கப்படுவதாக உள்ளூர் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. பிலிப்பைன்சில் 2025ஆம் ஆண்டில் மட்டும் 28,234 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இது 40% அதிகம் என தகவல் தெரிவிக்கின்றன.