JAPAN EARTHQUAKE (PHOTO CREDIT: @BNONEWS)

ஜனவரி 01, ஜப்பான் (WORLD NEWS): நிலநடுத்தட்டுகளின் மீது அமைந்துள்ள ஜப்பான் நாட்டின் மீது, இன்று காலை அடுத்தடுத்து மூன்று பயங்கர நாடகங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது ரிட்டர் அளவுகோலில் 7.4, 6.3, 7.6 என பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, ஜப்பானில் சுனாமியை (Japan Earthquake Tsunami) எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவசர கதியில் உயர்வான இடங்களை நோக்கி இடம்பெற தொடங்கியுள்ளனர். PSLV C58 XPoSat Mission: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நடுவே, கம்பீரமாக சாதனை படைத்த இஸ்ரோ; விண்ணில் ஏவப்பட்டது எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள்..! 

தேசிய அளவிலான மீட்பு படையினர் மற்றும் காவலர்கள், இராணுவத்தினர் போர்க்கால அடிப்படையில் களமிறக்கப்பட்டு, மக்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள நகரங்களில் கடல் அலை லேசான உயர்வுடன் பொங்கி வந்துள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் கூடுதல் அலைகளை உயரமாக ஏற்படுத்தி, சுனாமியாக மாறலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.