செப்டம்பர் 12, ஒட்டாவா (World News): இந்தியா தலைமையிலான ஜி-20 உச்சி மாநாடு (G-20 Summit 2023) டெல்லியில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (September 9, 10) நடைபெற்றது. இதில் பங்கேற்க கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அவரது மகனுடன் இந்தியா வந்திருந்தார். மாநாடு நிறைவடைந்ததும் ட்ரூடோ ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு திரும்புவதாக இருந்தது. ஆனால் அவரது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் அவர் இந்தியாவில் தங்கினார்.
இந்நிலையில்டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்ட மாற்று விமானம் சிசி-150 போலரைஸ், ரோம் வழியாக வருவதற்கு பதிலாக லண்டனுக்கு திசை மாறி சென்றிருக்கிறது. அந்த விமானம் இன்று அதிகாலை லண்டனில் இருந்து புறப்படும் என்று அறிக்கைகள் வெளியானது. அதில் மேலும் தாமதம் ஏற்பட்டதால் தொழில்நுட்ப வல்லுநர்கள் மாற்று பாகங்களுடன் டெல்லிக்கு அனுப்பப்பட்டனர். Microsoft Updates: கணினி அறிமுகமான காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருந்த வேர்ட்பேட் நீக்கப்பட போகிறது: மைக்ரோசாப்ட்-இன் எதிர்பாராத அறிவிப்பு.!
ஜஸ்டின் ட்ரூடோ பயணம் செய்த விமானம் 36ஆண்டுகளாக பயன்பாட்டில் இருப்பதாகவும், அதில் ஏற்கனவே இது போன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று மதியம் ஒரு மணி அளவில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவருடன் மாநாட்டில் கலந்து கொண்ட அதிகாரிகள் கனடாவிற்கு புறப்பட்டனர்.