செப்டம்பர் 12, வாஷிங்டன் (Technology News): ஆங்கிலத்தில் டைப்பிங் கற்பது தொடங்கி, அலுவலக பணிகள் வரை எல்லாவற்றிற்கும் வேர்ட்பேட் (Wordpad) இன்றியமையாத பங்களித்திருக்கிறது. வேர்ட்பேட்- ஐ விட ஆற்றல் மிகுந்த பல கருவிகள் வந்திருந்தாலும் அதுதான் மைக்ரோசாப்ட் ஆபீஸின் மற்ற ப்ரோகிராம்களுக்கு அடித்தளமாக இருந்தது.
30 ஆண்டுகளுக்கும் மேல் உபயோகத்தில் இருந்த செயலி, சமீப காலமாக மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுவதில்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகிறது. அதனால் வேர்ட்பேட்- ஐ (Microsoft Wordpad) நிறுத்தப் போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
வின்டோஸ் 95- இல் தொடங்கி எல்லா கணினிகளிலும் வேர்ட்பேட் ஒரு அங்கமாக இருக்கிறது. Actress Gautami’s Land taken over: நில அபகரிப்பு புகார் கொடுத்திருக்கிறார் நடிகை கௌதமி: ரூ.25 கோடி நிலத்தை மோசடி செய்து கைப்பற்றிய கட்டுமான அதிபர்.!
வின்டொஸ் 7 (Windows 7) அறிமுகமான போது அதில் இருந்த வேர்ட் ப்ராசசரில் (Word Processor) பல நவீன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தது. வின்டொஸ் 8- ல் (Windows 8) கவனிக்கும்படியான அப்டேட் ஒன்றும் இல்லை. வேர்ட்பேட் எப்போது நீக்கப்படும் என்பதைப் பற்றி மைக்ரோசாப்ட் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை .
மைக்ரோசாப்ட் கோபைலட் (Microsoft Copilot) என்ற பெயரில் செயற்கை தொழில்நுட்பத்துடன் கூடிய இணைப்பு (AI Supporter) மைக்ரோசாப்டின் வின்டொஸ் 11- இல் (Windows 11) அறிமுகமாக இருக்கிறது. இனி வரவிருக்கும் அடுத்தடுத்த அப்டேடட் வர்ஷன்களில் பிங் ஏஐ (Bing AI) போன்ற புதிய செயற்கை தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் இடம்பெறும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.