North Korean President Kim Jong Un Russia Visit (Photo Credit: Twitter)

செப்டம்பர் 16, சியோல் (World News): வடகொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், அரசுமுறை பயணமாக ரஷியாவுக்கு கடந்த சனிக்கிழமை சென்றடைந்தார். அங்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் - கிம் ஜாங் உன்னுக்கு உற்சாக வரவேற்பும் அளித்திருந்தார்.

இருநாட்டு அதிபர்களும் இராணுவ தொழில்நுட்பத்தை பகிருவதர்காவும், நட்புறவை மேம்படுத்த உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டன. ஆனால், இந்த கூற்றை அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ரஷியா - உக்ரைன் இடையேயான போரில், ரஷிய இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை வழங்கவே வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷியா சென்றுள்ளார். இதனால் இருநாடுகளின் மீதான பொருளாதார தடைகள் மேலும் அதிகரிக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. Dad Little Princess: 13 வயதில் இருந்து பேஸ்புக் காதல்.. பெற்றோரின் நகை, பணத்தை உத்தரவிட்டு காதலனை கரம்பிடித்த தொழிலதிபரின் மகள்.! 

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்த காட்சிகள் (Photo Credit: Twitter)

அமெரிக்காவின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத இரண்டு அதிபர்களும், தங்களின் நட்பை வலுப்படுத்த தேவையான அனைத்து முயற்சியையும் எடுத்துக்கொண்டுள்ளனர். இன்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷியாவில் விலாடிவோஸ்டாக் (Vladivostok) நகரில் அமைந்திருக்கும் கப்பல் படைத்தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

ரஷியா தனது தயாரிப்பான பல அணு ஆயுதங்களை அங்கு வைத்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில், அதனை நேரில் சென்று பார்வையிடவும் கிம் ஜாங் உன் அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஏற்கனவே அணு ஆயுத ஏவுகணை சோதனையில் ஈடுபடும் வடகொரியாவுக்கு, தேவையான தொழில்நுட்பங்கள் வழங்கப்படவும் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கலாம் என தெரியவருகிறது.

இரண்டு நாட்டின் அதிபர்களும் நேரில் சந்தித்துக்கொண்டதற்கே அமெரிக்கா மற்றும் அதன் சார்பு ஊடகங்கள் வன்மையான கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், ரஷியாவின் கப்பற்படை தளத்திற்கு கிம் அழைத்து செல்லப்பட்ட செய்தி அவர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.