Afghanistan Earthquake (Photo Credit : @NDTVWORLD X)

செப்டம்பர் 01, ஆப்கானிஸ்தான் (World News): ஆப்கானிஸ்தானில் இன்று காலை கிழக்கு பகுதியில் உள்ள குணார் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுக்கோலில் 6.0 புள்ளிகளாக பதிவாகிய நிலையில், பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் கடும் சேதம் அடைந்தன. அங்குள்ள குணார் மாகாணத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது வரை நிலநடுக்கத்தால் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. PM Modi China Visit: இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை.. சீனா சென்ற பிரதமர் மோடி முடிவு.! 

ஆப்கானிஸ்தானில் 500 பேர் நிலநடுக்கத்தால் உயிரிழப்பு :

இந்த உயிரிழப்புகளின் கோர காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், அது உலக நாடுகள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தாலிபான் ஆட்சிக்கு கீழே இருக்கும் ஆப்கானிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே இயற்கை பேரிடரை எதிர்கொண்டு வந்த நிலையில், அங்குள்ள பல கிராமங்கள் முற்றிலும் நிலநடுக்கத்தால் அழிந்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக 500 பேர் பலி :