PM Modi & Xi Jinping meeting (Photo Credit : @visegrad24 X)

ஆகஸ்ட் 31, சீனா (China News): ஜப்பானுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஆகஸ்ட் 30) சீனாவுக்கு சென்றடைந்தார். சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமருக்கு சீனாவில் உள்ள இந்திய வம்சாவளிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு சீன அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு தரப்பட்டது. அதனை தொடர்ந்து சீனாவின் ஷாங்காய் மாகாணம், தியான்ஸன் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பின் (Xi Jinping) மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இருநாட்டுக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் போன்றவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விரைவில் இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான பயணம் (India - China Direct flights) தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. PM Modi Japan Visit: ஜப்பானில் பிரதமர் நரேந்திர மோடி.. ஜப்பானியர்கள், இந்தியர்கள் உற்சாக வரவேற்பு.! 

இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான சேவை :

மேலும் வர்த்தகம், பரஸ்பர நல்லுறவு ஆசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது, உலக நாடுகளிடம் அமைதியை நிலைநாட்டுவது (SCO Summit India - China)போன்ற பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக சீனா - இந்தியா உறவுகள் அடுத்த கட்டமாக புதிய பாதைக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா - சீனா எல்லையில் இருக்கும் கல்வான் பகுதியில் இருதரப்பு ராணுவங்களும் மோதிக்கொண்டன. இந்த நிகழ்வில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில், இருநாட்டுக்கு இடையேயான ராஜாங்க ரீதியிலான உறவுகள் கடும் விரிசல் அடைந்தது. இதனால் சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், நேரடி விமான சேவையும் ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது.

விரைவில் மாற்றம் :

இதனால் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள இந்தியர்கள் மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சென்று அங்கிருந்து சீன நாட்டில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. தற்போது இந்த நிலை மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடி விமான சேவை - இருநாட்டு பரஸ்பர உறவில் உறுதி :