Philippines Earthquake (Photo Credit : @CultureWar2020 X)

அக்டோபர் 10, பிலிப்பைன்ஸ் (Philippines): பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவோ நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது கடல் மட்டத்தில் 20 கிமீ (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடலோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் விரைவாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கி மக்கள் உயிர் பயத்தில் கதறும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்:

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயாஸ் மாகாணத்தில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 74-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலரும் காயமடைந்தனர். இதனிடையே தற்போது மீண்டும் பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி அலை தாக்கலாம் என்றும், உயிருக்கு ஆபத்தான அலையாக 300 கிமீ நீளத்திற்கு உயரங்கள் எழலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. Papua New Guinea Earthquake: பப்புவா நியூ கினியா தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மக்கள் வீதிகளில் தஞ்சம்.! 

கட்டிடங்கள் குலுங்கியதால் கதறிய மக்கள்:

மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி:

இந்த சுனாமி அச்சுறுத்தலானது இந்தோனேசியா மற்றும் பப்புவாவின் சில பகுதிகளுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா நாட்டில் உள்ள வடக்கு சுலாவேசி மற்றும் பப்புவாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடலோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் தலைசுற்றல் ஏற்பட்டு மயக்கமடைந்த உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்சேதங்கள் மற்றும் பொருட்செதங்கள் குறித்த தகவல் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

உயரத்தில் உயிர்பயத்தில் கதறிய தொழிலாளர்கள்: