Mexico Bus Crash 04 Aug 2023 (Photo Credit Twitter)

ஆகஸ்ட் 04, மெக்சிகோ (World News): மெக்சிகோ நாட்டில் உள்ள அமெரிக்கா - மெக்சிகோ எல்லைப்பகுதியில் இருக்கும் Tijuana நகரை நோக்கி தனியார் பேருந்து 42 பயணிகளுடன் பயணம் செய்துகொண்டு இருந்தது. இந்த பேருந்து இந்திய, ஆப்பிரிக்க நாட்டினை சேர்ந்த மக்களை ஏற்றிக்கொண்டு பயணம் செய்துள்ளது.

பேருந்து அங்குள்ள Barranca Blanca தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்றபோது, மலைப்பாங்கான பகுதியில் ஓட்டுநர் வாகனத்தை அதிவேகத்தில் இயக்கி இருக்கிறார். அச்சமயம் அங்குள்ள திருப்பத்தில் பேருந்தை திரும்ப வழியின்றி அது விபத்தில் சிக்கி இருக்கிறது.

இந்த விபத்தில் பேருந்து 131 அடி (40 மீ) பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 18 பேர் பரிதாபமாக பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். Guinness Record: உலகிலேயே அதிக சப்தம் எழுப்பும் பெண்மணி இவர்தான்; கின்னஸ் சாதனையின் விபரம் இதோ.! 

20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உயிருக்கு போராட, அவர்களை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை மெக்சிகோவின் Nayarit மாகாண அரசு உறுதி செய்துள்ளது.

பல உலக நாடுகளை சேர்ந்த மக்கள் மெக்சிகோ சென்று அகதிகளாக அமெரிக்காவில் தஞ்சம் புகுவது தொடர்ந்து வரும் நிலையில், அவர்களிடம் பணம் வாங்கி அமெரிக்க எல்லைக்கு கொண்டு செல்வதாக ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் ஓட்டுநர்களால் இவ்வாறான விபத்துகள் தொடருவதாக தெரியவருகிறது.

கடந்த மாதம் மெக்சிகோவின் தென்பகுதியில் இருக்கும் Oaxaca மாகாணத்தில் நடந்த விபத்தில் 29 பேரும் பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.