Mexico Church Collapse (Photo Credit: Twitter)

அக்டோபர் 02, மெக்சிகோ (World News): மெக்சிகோவில் உள்ள சியூடேட் மெடிரோ (Ciudad Madero) பகுதியில் தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இன்று தேவாலயத்தில் மக்கள் ஞானஸ்தானம் பெரும் நிகழ்வுக்காக கூடியிருந்தனர்.

இந்நிலையில், திடீரென தேவாலயத்தின் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. தேவாலயத்தின் வெளிப்பகுதியில் இருந்த சிலர், பதறியபடி அங்கிருந்து வெளியே வந்தனர்.

உட்புறத்தில் இருந்த பலரும் அங்கேயே இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட நிலையில், மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் துரிதமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். GST Collection: ஒரே மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் புது உச்சக்கட்டம்: ரூ.1.63 இலட்சம் கோடி வசூலானதாக மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு.! 

இந்த விபத்தில் 7 பேரின் சடலம் இடிபாடுகளில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டது. சுமார் 20 பேர் அங்கு சிக்கிக்கொண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடருகின்றன.

முதற்கட்ட விசாரணையில் 100 பேர் கூடியிருந்த தேவாலயத்தில் விபத்து நடந்தது உறுதியானது. 49 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.