GST (Photo Credit: Twitter)

அக்டோபர் 01, புதுடெல்லி (New Delhi): மத்திய அரசுக்கு நேரடி வருவாய் கிடைக்கும் பொருட்டு அறிமுகம் செய்யப்பட்ட அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (Goods Service Tax GST), நடப்பு மாதத்தில் 10.2% உயர்ந்து ரூ.1.63 இலட்சம் கோடி வருவாயை தந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் தொகையை விட, இது 2.3% அதிகம் ஆகும். இதனால் தொடர்ச்சியாக 7வது மாதமாக மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 இலட்சம் கோடியை கடந்து பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

2023 - 2024ம் நிதியாண்டில் ஜிஎஸ்டி சராசரி மாத வசூல் என்பது ரூ.1.65 இலட்சம் கோடியாக இருக்கிறது. கடந்த 2017 - 2018ம் நிதியாண்டுகளில் ஜிஎஸ்டி என்பது ரூ.1 இலட்சம் கோடியில் இருந்தது, தற்போது கொரோனாவுக்கு பின் புதிய உச்சமெடுத்து வருகிறது. Gold Medal in Men’s Shooting Trap Team: அடுத்த வெற்றி… தங்கப்பதக்கத்தை சூடிய இந்திய அணி: ஆசிய போட்டிகளில் தொடர் அபாரம்..! 

GST FY 2023 - 2024 Sep Month (Photo Credit: Twitter)

2023 - 2024ம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான ஜிஎஸ்டி வசூல், 2022 - 2023 முதல் பகுதியை விட 11% அதிகம் என நிதியமைச்சகம் தெரிவிக்கிறது. 2023 - 2024 பட்ஜெட்டின் படி, மத்திய அரசு ஜிஎஸ்டி வசூல் 12% ஒட்டுமொத்தமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது.

செப்டம்பர் மாதம் மத்திய ஜிஎஸ்டி வரவு ரூ.29,818 கோடியும், மாநில ஜிஎஸ்டி ரூ.37,657 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.83,623 கோடியும், இழப்பீடு செஸ் ரூ.11,613 கோடியும் என இருக்கிறது. கடந்த நிதியாண்டை விட தற்போதைய வருவாய் 14% அதிகம் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.