Mexico Fight (Photo Credit: @JeffNadu X)

டிசம்பர் 09, மெக்சிகோ சிட்டி (World News): மெக்சிகோ நாட்டில் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை கடத்தும் கும்பல், அவ்வப்போது பொதுவெளிகளில் போட்டிசண்டையில் ஈடுபடுவது தொடருகிறது. இதனால் அப்பாவி பொதுமக்கள் பலரும் பரிதாபமாக உயிரிழக்கும் சோகமும் நிகழ்ந்து வந்தன.

குடியிருப்பு பகுதியில் சோகம்: இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் கும்பல், எடோமெக்ஸ் மாகாணம் டெக்ஸ்கால்டிட்லன் குடியிருப்பு பகுதிக்கு அருகே துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டது. இந்த சம்பவத்தில் இரண்டு குழுவை சேர்ந்த 11 பேர் பரிதாபமாக பலியாகினர். இவர்களில் 8 பேர் குற்றவாளிகள் ஆவார்கள். எஞ்சிய 3 பேர் அப்பாவிகள். Night Shift Effects: இரவு நேர வேலையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?.. தவிர்ப்பது எப்படி?..! 

10 ஆண்டுகளாக தொடர்ச்சி: இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு காவல் துறையினர் விரைந்தும், போதைப்பொருள் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. கடந்த 10 ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தல் விவகாரம் என்பது மெக்சிகோவில் பூதாகரமாக அதிகரித்து இருக்கிறது.

கப்பம் கேட்டு மிரட்டல்: விவசாயிகளிடம் இருந்து ஏக்கருக்கு தங்களுக்கு தேவையான பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டவே போதைப்பொருள் கடத்தல் கும்பல் வந்தத்தாகவும், அதுதொடர்பான பேச்சுவார்த்தையிலேயே துப்பாக்கிசூடு நடந்ததாகவும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகள் தாங்கள் யாருக்கும் பணம் கொடுக்க இயலாது என கூறியதை தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள்ளது.