டிசம்பர் 08, சென்னை (Chennai): தொடர் விலைவாசி உயர்வு, குடும்பத்தின் சூழ்நிலை, எதிர்காலம் தொடர்பான பயம் உட்பட பல காரணங்களால் மக்கள் இரவு-பகல் பாராது வேலை செய்து வருகின்றனர். இரவு நேரத்தில் வேலை செய்பவர்கள் உடல் மற்றும் மன ரீதியான கோளாறுகளை எதிர்கொள்கின்றனர். தற்போது வரை ஏற்படவில்லை எனினும், அதுசார்ந்த ஆபத்துகள் விரைவில் ஏற்படும்.
இன்று இரவு நேர வேலைகளை தொடர்ந்து மேற்கொள்வதால், உடல்-மன ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை தெரிந்துகொள்ளலாம்.
பெண்களுக்கு புற்றுநோய் அபாயம்: பகல் வேலைகளை விட இரவு நேரத்தில் பணியாற்றும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் என்பது அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் இரவு நேரத்தில் வேலைகளை குறைத்துக்கொண்டு, பகல் வேளை சார்ந்த பணிகளை பெண்கள் மேற்கொள்வது நல்லது. இயலாத பட்சத்தில் சுழற்சி முறை பணிகளையாவது மேற்கொள்ளலாம். தொடர் இரவு வேலை ஆபத்தானது ஆகும்.
ஆய்வில் அதிர்ச்சி தகவல்: கடந்த 2012ம் ஆண்டு சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, இரவு நேரத்தில் வேலை பார்த்து வரும் நபர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகரித்துள்ளது என்பது அம்பலமாகி இருக்கிறது. சரிவர தூக்கம் இல்லாததால் இரத்த அழுத்தம் அதிகரித்து, மாரடைப்பு அபாயம் உண்டாகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். Minor Raped While Drinking Alcohol: போதையில் உறங்கிய 16 வயது சிறுமி பலாத்காரம்.. வீடியோ எடுத்து ஸ்னாப்சாட்டில் பதிவிட்ட இளைஞரின் பகீர் செயல்.!
இரவுப்பணியால் ஏற்படும் தீமைகள்: இரவுநேர வேலை என்பது மனரீதியாக எதிர்மறை ஆற்றலை உண்டாக்குகிறது. இதனால் உடல் மற்றும் மனம் சோர்வடைகிறது. இவ்வாறான நேரங்களில் உச்சபட்ச கவனத்துடன் பணிகளை மேற்கொண்டாலும் தடுமாற்றங்கள் என்பது நிகழும். குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் உடலும் ஓய்வெடுக்கச்சொல்லும். இதனால் கவனம் சிதறி, சில நேரங்களில் உடலில் காயங்கள் ஏற்படும் அளவு விபத்து நடக்கலாம்.
பகல் உறக்கத்தால் ஏற்படும் பிரச்சனை: இரவுப்பணியை முடித்துவிட்டு பகல் நேரங்களில் உறங்குவது உடற்பருமன், சர்க்கரை நோய் போன்றவற்றை ஏற்படுத்தும். அதேபோல, வயிற்றுப்போக்கு, அல்சர், குடல் பிரச்சனை, இரைப்பை சார்ந்த நோய்களை உண்டாகும். இரவுகளில் வேலைபார்த்துவிட்டு பகலில் உறங்கினாலும், ஆழ்ந்த உறக்கம் என்பது பெரும்பாலும் எட்டாக்கனியே. இது நாளடைவில் தூக்கமின்மை பிரச்சனைக்கு கொண்டு சென்றுவிடும்.
உடலுக்கு நன்மை செய்வதை சாப்பிட வேண்டும்: இன்றளவில் உள்ள உலக இயந்திரத்தில் இரவுப்பணிகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டாலும், அவ்வாறான பணிகளை மேற்கொள்வோர் உடல்நலன்-மனநலனை பாதுகாக்க காய்கறிகள், பழங்கள், கீரைகள், ஆட்டு இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உடலுக்கும், கண்ணுக்கும் நன்மைதரும் பொருட்களை தேடித்தேடி சாப்பிட வேண்டும்.
தண்ணீரே நல்லது: இரவுநேர பணியாளர்கள் தூக்கத்தை கலைக்க தேநீர், காபி போன்றவற்றை அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமாக நீர் குடிப்பது நல்லது. இளம் சூடுள்ள நீரையும் குடிக்கலாம்.