NASA Mars Mission End (Photo Credit: @Reuters X)

ஜனவரி 26, வாஷிங்க்டன் டிசி (Technology News): அமெரிக்காவில் உள்ள வாஷிங்க்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நாசா நிறுவனம், பிரபஞ்ச அளவில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. வானியலில் நிகழும் மாற்றங்கள், பூமிக்கு வானில் இருந்து வரும் ஆபத்துகள், மனிதர்களை போன்ற பிற கிரகங்கள் என நாசாவின் ஆய்வு பட்டியல் நீண்டுகொண்ட செல்லும். கடந்த 2021ம் ஆண்டு நாசா செவ்வாய் தொடர்பான ஆராய்ச்சிக்கு செயற்கைகோள் ஒன்றை அனுப்பியது. இந்த செயற்கைகோளுடன் செவ்வாயின் நிலப்பரப்பில் பறக்கும் சக்தி கொண்ட ஹெலிகாப்டரையும் அனுப்பி வைத்தது. இந்த செயற்கைகோள் 2021 ஏப்ரலில் செவ்வாயில் தரையிறங்கி தனது ஆராய்ச்சியை மேற்கொள்ள தொடங்கியது. Republic Day Marching by Women: தலைநகரில் உச்சம்பெற்ற குடியரசு தினவிழா கொண்டாட்டம்: பெண் சிங்கங்கள் தலைமையில் இராணுவ அணிவகுப்பு.. கண்கவர் காட்சிகள் இதோ.! 

தொடர்பை இழந்து சேதமானதால் ஆய்வை முடித்தனர்: நாசா விஞ்ஞானிகள் (NASA Mars Mission End) அனுப்பிய ஹெலிகாப்டரும் செவ்வாயின் நிலப்பரப்பில் பல ஆராய்ச்சிகளை செய்தது. 1000 நாட்களை கடந்து வெற்றிகரமாக இயங்கிய ஹெலிகாப்டர், கடந்த ஜனவரி 18 அன்று தனது தொடர்பை இழந்தது. அந்த ஹெலிகாப்டர் இறுதியாக சமிக்கை அனுப்பிய இடத்தினை ஆராய்ந்து சென்று பார்க்க மற்றொரு இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, செவ்வாயின் மேற்பரப்பில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த ஹெலிகாப்டர் தகவலை அனுப்பும் தொழில்நுட்பம் சரி செய்யப்பட்டாலும், அதன் இறக்கைகள் சேதமானதால் மேற்படி பறக்க இயலாது. இதனால் செவ்வாயில் தனது ஆராய்ச்சியை நாசா முடித்துக்கொள்வதாக அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பை நாசாவின் 14வது தலைமை நிர்வாக அதிகாரி பில் நெல்சன் தெரிவித்தார்.