New York Mayor Announce Deepawali Holiday (Photo Credit: ANI)

ஜூன் 27, நியூயார்க் (New York): புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இந்தியர்கள் அமெரிக்காவில் கோடிக்கணக்கில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அங்குள்ள பல துறைகளில் அரை நூற்றாண்டுகளையும் கடந்து கோலோச்சி இருக்கின்றனர்.

அங்கு தங்களின் குறைந்தபட்ச உரிமைகளுக்காகவும் அவ்வப்போது அவர்கள் போராடி வெற்றி பெற்று வருகின்றனர். குடும்பத்தோடு அமெரிக்காவில் தங்கியிருந்து அந்நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் இந்தியர்கள், இந்துக்களின் கொண்டாட்டத்தை அங்கும் முன்னெடுக்கின்றனர்.

இதற்காக அரசின் ஒத்துழைப்போடு சட்டப்படி அதற்கான அனுமதியை பெரும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களில் தீபஒளி நாளன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், நியூயார்க் நகரிலும் தீபஒளி அன்று பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டப்போராட்டத்தை கடந்த ஆண்டு கையில் எடுத்த சட்டமன்ற உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார் அதனை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

இதனை பாராட்டியுள்ள நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து, அவருடன் நின்றதில் தான் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இனிய தீபாவளியாக அமையட்டும் என அவர் கூறியுள்ளார்.