Nobel Peace Prize 2025 (Photo Credit : @GloballyPop X)

அக்டோபர் 10, ஸ்வீடன் (World News): கடந்த 1901ஆம் ஆண்டு முதல், இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு நோபல் பரிசு (Nobel Prize) வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் தலை சிறந்த தொழில்நுட்ப கருவி, கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சியில் புதிய அத்தியாயத்தில் அடி எடுத்து வைக்கும் நபர்களை பாராட்டி நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அமைதிக்கான நோபல் பரிசு நோபல் அறக்கட்டளை மூலம் வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு அறிவிப்புகள்:

அதன்படி 2025ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு மேரி இ. பிரன்கோவ் (Mary Brunkow), பிரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), மற்றும் ஷிமோன் சகாகுச்சி (Shimon Sakaguchi) ஆகியோருக்கு கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் அமைப்பு அறிவித்துள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தி குறித்த கண்டுபிடிப்புகளுக்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் கிளார்க் (John Clarke), மைக்கேல் எச். டெவோரெட் (Michel H. Devoret), ஜான் எம். மார்டினிஸ் (John M. Martinis) ஆகியோருக்கு மின்சுற்றில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் இயந்திரவியல் சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் அளவிடு ஆகியவற்றை கண்டுபிடித்ததற்காக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Nobel Prize 2025: நோபல் பரிசு 2025; மருத்துவத்துறையில் 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு..! 

அமைதிக்கான நோபல் பரிசு (Nobel Peace Prize 2025):

இதனைத்தொடர்ந்து வேதியியலுக்கான நோபல் பரிசு சுசுமு கிடகாவா (Susumu Kitagawa), ரிச்சர்ட் ராப்சன் (Richard Robson), உமர் எம்.யாகி (Omar M. Yaghi) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு (Laszlo Krasznahorkai) வழங்கப்படுகிறது. மேலும் 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடாவுக்கு (Maria Corina Machado) வழங்கப்படுகிறது. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து போராடி வந்தமைக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.

அமெரிக்க அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு இல்லை:

இருளுக்கு மத்தியில் ஜனநாயகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையான செயல்களை முன்னெடுத்ததாக அமைதியின் வெற்றியாளருக்கு அமைதிக்கான நோபல் பரிசு செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு: