மே 29, வட கொரியா (World News): தென் கொரியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருவதால், இரு நாடுகளையும் ஒருசேர வட கொரியா எச்சரித்து வருகிறது. இந்நிலையில் வட கொரியா மே 27 முதல் ஜூன் 4 க்குள் ஒரு செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் கடலோர காவல் படை தெரிவித்தது. இந்நிலையில், வடகொரியாவின் 2-வது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து உளவு செயற்கைக் கோளை ஏற்றிச்சென்ற ராக்கெட் நடுவானில் வெடித்து. இதற்கிடையே வடகொரியா ஏவிய ஏவுகணை கடலில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது. Abucted Man Reunition After 22 Years: 22 ஆண்டுகளுக்கு பின்பு தாயுடன் சேர்ந்த சேய்.. உத்திரபிரதேசத்தில் நடந்த நெகழ்சியான சம்பவம்..!
கடந்த சில மாதங்களாகவே வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே மிக தீவிரமாக சண்டை நடந்து வருகிறது. இப்போது இந்த பிரச்சனை போராக மாற வாய்ப்புள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். மேலும் 2018 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையில் ராணுவ ஒப்பந்தம் போடப்பட்டது. இருப்பினும், தற்போது ராணுவ ஒப்பந்தத்தை மீறி வட கொரியா தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தென் கொரியா குற்றம்சாட்டி வருகிறது.