Udhayanidhi Stalin (Photo Credit: @UdhayStalin X)

நவம்பர் 15, கன்னியாகுமரி (Kanyakumari): 2024 பாராளுமன்ற தேர்தல் (Parliament Election 2024), 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பரபரப்பு தமிழகத்தில் தற்போதே ஏற்பட தொடங்கியுள்ளது. அரசியல் ரீதியாக எதிர்க்கட்சி அதிமுக (AIADMK) தொடர்ந்து ஆளுங்கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. ஆளுங்கட்சி திமுக (DMK), பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு மக்களை சந்திக்க பல வியூகங்களை தீட்டி இருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜக (Tamilnadu BJP) சார்பில் என் மண் என் மக்கள் பயணத்தின் வாயிலாக, அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை (Annamalai) மக்களை சந்தித்து வந்தார். இதனைத்தொடர்ந்து, திமுகவும் பிரம்மாண்ட இருசக்கர வாகன பேரணிக்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து 188 இருசக்கர வாகனத்தோடு திமுக முக்கியப்புள்ளிகள் இருசக்கர வாகன பேரணியை தொடங்கி இருக்கிறது. இதன் வாயிலாக தொடர்ந்து 13 நாட்களில் 234 தொகுதியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 544 பிரச்சார மையங்கள் வாயிலாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்யவும் திமுக திட்டமிட்டுள்ளது. Prayers for Team India's Victory: இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறவேண்டி, மதுரையில் சிறப்பு வழிபாடு; கிரிக்கெட் ரசிகர்கள் அசத்தல்.! 

DMK Bike Rally Inauguration (Photo Credit: @UdhayStalin X)

இந்நிலையில், அமைச்சர் உதயநிதியின் (Udhayanidhi Stalin) எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், "கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம்!

மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட #DMKriders-ன் வாகனப் பேரணியை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே இன்று தொடங்கி வைத்தோம்.

13 நாட்கள் - 234 தொகுதிகள் - 504 பிரச்சார மையங்கள் - 8,647 கிலோமீட்டர் என லட்சோப லட்ச இளைஞர்களை சந்திக்கவுள்ள இந்த இருசக்கர வாகனப் பேரணி, கழக வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும். இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் கழக இளைஞர் படைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! பாசிஸ்ட்டுகளை விரட்டி - மாநில உரிமைகள் மீட்க உறுதியேற்போம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.