Sudan Crisis (Photo Credit: Twitter)

ஏப்ரல் 26, சூடான் (World News): ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் (Sudan) நாட்டில் இராணுவம் மற்றும் துணை இராணுவத்திற்கு (RSF Paramilitary) இடையே நடந்த மோதல் கலவரமாக மாறியுள்ளது. இதனால் இரண்டு தரப்பினரும் தொடர்ந்து சண்டையிட்டு வரும் நிலையில், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தனது விமானப்படை மற்றும் கப்பற்படையை அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில், ஆபரேஷன் காவேரி திட்டத்தின் கீழ் சூடானில் உள்ள இந்தியர்களை ஐஏஎப் சி 130 ஜெ (IAF C-130 J) ரக விமானம் மூலமாக மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. Vande Bharat Train: நாடாளுமன்ற உறுப்பினரின் போட்டோவை வந்தே பாரத் இரயிலில் ஒட்டிய ஆதரவாளர்கள்; கேரளாவில் சர்ச்சை.! 

ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் சர்ச்சைக்குரிய பிரிவினைவாத பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில், சூடானில் இராணுவமே இரண்டு குழுவாக பிரிந்து மோதிக்கொள்வது பிற நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.