Sudan Cholera Disease (Photo Credit : @Voz_US /@TheStarKenya X)

மே 28, சூடான் (World News): ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் உள்நாட்டு போர் காரணமாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. இதனால் மக்களுக்கு பாதுகாப்பின்மை, உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காதது, பசி, பஞ்சம், பட்டினி என பல சோகங்கள் அங்கு நிறைந்து கிடக்கின்றன. இதனிடையே சூடானில் தற்போது பரவிய காலரா தொற்று காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 170க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர்.

காலரா பரவிய பகுதிகள் :

சூடானின் தலைநகர் கார்ட்டூம் மற்றும் முக்கிய நகரங்களான ஓம்டுர்மனில் நோய் தொற்றுகள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல கோர்டோபான், காசிரா, சென்னார் மற்றும் நைல் நதி மாகாணங்களிலும் இந்த புதிய காலரா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் அவதி.. பணம் கொடுத்து வெளிநாட்டு பெண்களை வாங்கும் ஆண்கள்.! 

சுகாதாரத்துறை அமைச்சரின் விளக்கம் :

இந்த விஷயம் குறித்து சூடானின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹைதம் இப்ராஹிம் தெரிவிக்கையில், "கடந்த ஒரு மாதத்தில் கார்ட்டூமில் 700 பேர் காலரா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது. பாக்டீரியாவில் உண்டாகும் காலராவானது, அசுத்தமான உணவு அல்லது குடிநீரை எடுத்துக் கொள்வதால் பரவி வருகிறது. இதனால் கடும் வயிற்றுப்போக்கு, நீர் இழப்பு ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும். எனவே மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

காலராவால் அவதிப்படும் மக்கள் :