ஜனவரி 09, இஸ்லாமாபாத் (Pakistan News): பாகிஸ்தான் நாட்டில் நிலவும் உள்நாட்டு அரசியல் குழப்பம், பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகளின் அரசுக்கு எதிரான போர் உட்பட பல்வேறு பிரச்சனைகளால் மக்களின் வாழ்வாதாரமும், எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை சரி செய்ய அரசு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அரசியல் குழப்பத்தால் தொடரும் சர்ச்சை: இம்ரான் கானின் தலைமையில் நடைபெற்று வந்த ஆட்சி, அரசியல் சூழ்ச்சியால் அகற்றப்பட்டதை தொடர்ந்து உச்சகட்ட அரசியல் குழப்பமும் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது தற்காலிகாக பிரதமராக அன்வர் உல் ஹக் கக்கர் பணியாற்றி வருகிறார். இம்ரான் கானும் தனது தலைமையில் மீண்டும் ஆட்சியை அமைக்க வேண்டும் என முழுநேர அரசியலில் களமிறங்கி செயல்பட்டு வருகிறார்.
தேர்தலுக்கு தயாராகும் அரசியல்கட்சிகள்: பிப்ரவரியில் நடைபெறவுள்ள 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பாகிஸ்தான் தயாராகி வரும் நிலையில், இம்ரான் கான் விரைவில் காணொளி வாயிலாக தேர்தல் அறிக்கை வெளியிட தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானில் இணையசேவை என்பது பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெளிவான தரவுகள் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அமைச்சகத்தால் கூட தெரிவிக்கப்படவில்லை. Online Gambling: ரூ.50 இலட்சம் பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் சோகம்: மகனை கொலை செய்து, தந்தை தற்கொலை முயற்சி.!
இணையசேவை கடும் பாதிப்பு: இதனால் மக்கள் தங்களின் சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்த இயலாத சூழல் உருவாகி இருக்கிறது. தொடர்ந்து அதே நிலை நீடிப்பதால், மக்கள் செய்வதறியாதது இருக்கின்றனர். இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் அமைப்பு தேர்தல் அறிக்கையை வெளியிட தயாராகுவதை முடக்கவே, இணையதள சேவை முடக்கப்ட்டுள்ளதாக அங்குள்ள களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
விடைதெரியாத மர்மமாக இணையசேவை பிரச்சனை: கடந்த டிசம்பர் 17ம் தேதியும் இதே போன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தபோது, இதேபோல தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. அன்றைய நாளின் இரவு 8 மணிக்கு மேல் தொலைத்தொடர்பு இணையசேவைகள் சீராகின. தற்போது அந்நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.