Imran Khan (Photo Credit: Facebook)

மே 10, இஸ்லாமாபாத் (Pakistan News): பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர், முன்னாள் கிரிக்கெட் வீரர், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் 'Imran Khan' (வயது 70). இவர் பயங்கரவாதம், தேசத்துரோகம், மத நிந்தனை, ஊழல் மற்றும் பணமோசடி, வன்முறையை தூண்டுதல் உட்பட பல வழக்குகளில் சிக்கி இருந்தார்.

இதற்கிடையில், மேற்கூறிய வழக்குகள் சம்பந்தமாக இம்ரான் கான் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு நேற்று வருகை தந்தார். அப்போது, அவரை சுற்றிவளைத்த பாகிஸ்தானிய துணை இராணுவ படையினர், திரைப்பட பாணியில் அவரை கைது செய்தனர்.

இம்ரான் கான் காதிர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் கைதை அறிந்த ஆதரவாளர்கள் உயர்நீதிமன்ற வளாகத்திலேயே போராட்டத்தில் குதித்தனர். சாலை மறியல் சம்பவமும் நடந்தன. இதனால் பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை உருவாகியதை தொடர்ந்து, இஸ்லாமாபாத் (Islamabad) நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. The Kerala Story: தி கேரளா ஸ்டோரி படக்குழுவினருக்கு அழைப்புகளில் வரும் மிரட்டல்; பயத்தின் உச்சக்கட்டத்தில் படக்குழு.!

பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐஎஸ்ஐ (Pakistan ISI) மூத்த அதிகாரியின் மீது இம்ரான் கான் ஆதாரமற்ற குற்றசாட்டுகள் குறித்து பேசியதாக கூறப்படும் ஒரேநாளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்தபோது நடந்துள்ளது.

திரைப்பட பாணியில் கண்ணாடி ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த துணை இராணுவத்தினர், வழக்கறிஞர்கள் மற்றும் பிற பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கிவிட்டு இம்ரான் கானை கைது செய்து அழைத்து சென்றனர். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.