மே 09, மும்பை (Cinema News): ஹிந்தி மொழியில் இயக்குனர் சுதிப்டோ சென் (Sudipto Sen) இயக்கத்தில் உருவாகி, கடந்த 05 மே 2023 அன்று திரையரங்கில் வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி (The Kerala Story). இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகளின்படி, கதைக்களம் என்பது கேரளா மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண்மணி பிற மதத்தை சேர்ந்த பெண்களை மூளைச்சலவை செய்து வெளிநாட்டுக்கு கடத்தி பயங்கரவாதத்தில் ஈடுபடுத்துவது தொடர்பான கதையம்சம் இருந்தது.
இந்த படத்தின் டிரைலர் வெளியான போதே இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பி, பல மாநிலங்களில் படத்தின் வெளியீடுக்கு முன்னரே தடை விதிக்கப்பட்டது. படத்துக்கு தடை விதிக்கூறி உச்சநீதிமன்றம் வரை சென்றும் பலனில்லாது, உச்சநீதிமன்றம் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டதால், அதற்கு தடை விதிக்க இயலாது என்று கூறியது. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில், காவல் துறையினர் பாதுகாப்புக்கு நடுவே படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. உளவு வேலைபார்த்த சீன அதிகாரிக்கு ஆப்படித்த கனடா; “எதிர்நடவடிக்கை இருக்கும்” – சீனா எச்சரிக்கை.!
இந்த நிலையில், படத்தின் இயக்குனர் சென், "எங்களின் படக்குழுவினர் வீட்டில் இருந்து தனியே வெளியே செல்ல வேண்டாம் என்ற நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு அடையாளம் தெரியாத எண்களில் இருந்தெல்லாம் மிரட்டல் தகவல்கள் வருகின்றன. காவல் துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என்று தெரிவித்துள்ளார். அவர் தற்போது வரை எழுத்துப்பூர்வ புகார் அளிக்காத நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். விரைவில் எழுத்துப்பூர்வ புகார் பெறப்படும் என கூறப்படுகிறது.