Prison | Imran Khan (Photo Credit: Pixabay / @TheGlobal_Index X)

ஜனவரி 30, இஸ்லாமாபாத் (Pakistan News): கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தானில் நிலவி வந்த உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக, இம்ரான் கான் (Imran Khan) தலைமையில் நடைபெற்ற வந்த ஆட்சியானது அகற்றப்பட்டது. தற்போது 2024 பாராளுமன்ற தேர்தலுக்காக அந்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. பிப்ரவரி மாதம் 08ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் சார்பில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்போதெல்லாம், அவர்களின் முயற்சியை சீர்குலைக்கும் நோக்கி பல அரசியல் காய்நகர்த்தல்கள் செய்யப்பட்டன.

பாகிஸ்தானில் நிலவிய மாபெரும் அரசியல் குழப்பம்: ஆட்சி இழப்புக்கு பின்னர் இம்ரான் கான் எதிர்க்கட்சிகளால் பல்வேறு விஷயங்கள் குறித்த குற்றச்சாட்டில் சிக்கிஇருந்தார். 2024 தேர்தலுக்காக தயாராகி வந்த இம்ரான் கானுக்கு அப்படிக்கும் வகையில், ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உள்நாட்டில் நிலவி வந்த பொருளாதாரப் பிரச்சினை, மின்வெட்டு, இணையவழி சேவை பாதிப்பு, பாதுகாப்பு குளறுபடி என அந்நாட்டு மக்கள் தவித்து வந்தாலும், அரசியல் ரீதியான காய் நகர்த்தல் இம்ரான் கானுக்கு எதிராக இருந்து வந்தன. இந்நிலையில், இம்ரான் கான் மற்றும் முகமது குரேஷி ஆகியோர் அரசு ரகசியங்களை வெளியிட்டதாக 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Elakkai Benefits: ஏலக்காயின் அசத்தல் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு?.. மனமனக்கும் விபரம் இதோ.! 

10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு: பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அபுவல் ஹஸ்னத் முஹம்மது சுல்கர்னைன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது குரேஷி (Makhdoom Shah Mahmood Hussain Qureshi) ஆகியோர் தொடர்புடைய வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானிய தூதர் அனுப்பிய ரகசிய தகவல்களை, இம்ரான் கான் மற்றும் முகமது குரேஷி ஆகியோர் வெளியிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், இருவரும் வழக்கின் விசாரணையின் போது இது முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்டனர். இந்நிலையில், விசாரணைக்கு பின்னர் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு, அவர்களை பத்தாண்டுகள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊழல் வழக்கில் சிக்கி 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இம்ரான் கான், தற்போது மீண்டும் 10 ஆண்டுகள் ரகசிய தகவலை வெளியிட்டதாக சிறையில் அடைக்கப்படுவார்.