ஆகஸ்ட் 23, ஜோக்கன்ஸ்பர்க் (World News): இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசுமுறை பயணமாக தென்னாபிரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெறும் 15வது பிரிக்ஸ் உச்சி (BRICS Summit 2023) மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார்.
இந்தியா, சீனா, ரஷியா, தென்னாபிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை உறுப்பினராக கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாடு, கொரோனா காரணமாக 3 ஆண்டுகளாக இணையவழியில் நடைபெற்ற நிலையில், தற்போது தென்னாபிரிக்கா தலைமையில் ஜோக்கன்ஸ்பர்க் நகரில் வைத்து நடைபெறுகிறது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள தலைநகர் ஜோக்கன்ஸ்பர்க் நகரின் விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, இந்திய தேசிய கீதம் இசைத்து அனைவரும் வரவேற்றனர். இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் - தென்னப்பிரிக்க அதிபர் சைரில் ராமபோசாவும் நேரில் சந்தித்தனர். PM Modi Visits South Africa: தென்ஆப்பிரிக்காவில் வந்தே மாதரம் முழக்கத்துடன் பிரதமர் மோடிக்கு வரவேற்பு-நெகிழ்ச்சியில் பிரதமர் மோடி.!
இந்த சந்திப்பின்போது, இரண்டு நாட்டு அதிபர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட மேடையில் சரியான இடத்தில் நிற்க இரண்டு நாட்டு தேசிய கொடிகளும் கீழே போடப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது. இதனைக்கண்ட பிரதமர் நரேந்திர மோடி, விரைந்து சென்று தனது கைகளில் இந்திய தேசிய கொடியை எடுத்துக்கொண்டார்.
பிரதமர் மோடியின் இந்த செயலை சற்றும் எதிர்பாராத தென்னாபிரிக்க அதிபர், தனது நாட்டின் தேசிய கொடியை எடுத்து அதிகாரிகளிடம் கொடுத்தார். மோடி நமது தேசிய கொடியை தன்னுடன் வைத்துக்கொண்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை பெற்று வைரலாகி வருகிறது.
नेताओं के स्थान को चिह्नित करने के लिए रखे गए थे देश के झंडे, देखिए फिर पीएम मोदी ने ऐसा क्या किया कि दक्षिण अफ्रीका के अध्यक्ष रामफोसा ने भी दोहराया #BRICSSummit2023 | #BRICSSummit | #BRICS | #PMModi | @PMOIndia | @narendramodi pic.twitter.com/o08wY4Ap6t
— Asianetnews Hindi (@AsianetNewsHN) August 23, 2023