அக்டோபர் 07, பப்புவா நியூ கினியா (World News): சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இயற்கை பேரிடரில், நிலநடுக்கம் அவ்வப்போது பல உலக நாடுகளை அதிரவைக்கிறது. சில நேரம் கடுமையான அளவில் ஏற்படும் நிலநடுக்கம் மனித உயிர்களையும் காவு வாங்குகிறது. அதிகளவு ஏற்படும் நிலநடுக்கம் சுனாமிக்கு வழிவகை செய்யும் என்பதால், தீவு நாடுகளின் நிலைமை நிலநடுக்கத்தின் போது கவலையை அளிக்கும் வகையில் இருக்கிறது.
பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்:
சமீபத்தில் ரஷ்யாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் சுனாமி அலைகளை ஏற்படுத்தி இருந்தது. அதுபோல ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 1000-க்கும் அதிகமான மக்களை காவு வாங்கியது. சர்வதேச அளவில் நில அதிர்வு தொடர்பான இயற்கை பேரிடர் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பசுபிக் பெருங்கடல் மீது அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. Nobel Prize 2025: நோபல் பரிசு 2025; மருத்துவத்துறையில் 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு..!
சக்திவாய்ந்த நிலநடுக்கம்:
லே மாகாணத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்க ஆய்வு மையங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் அங்குள்ள பல நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியதைத்தொடர்ந்து, மக்கள் பதறியபடி வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் தற்போது வரை சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. அங்குள்ள 21,000 க்கும் அதிகமான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிர்சேதங்கள், பொருட்சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.