PM Modi US Visit 2025 (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 13, வாஷிங்க்டன் டிசி (World News): அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த டொனால்ட் ட்ரம்ப் (US President Donald Trump), மீண்டும் இரண்டாவது முறையாக அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றார். அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து அமெரிக்காவின் பொருளாதாரத்தை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வரும் ட்ரம்ப், உலக நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதிஉதவி, இராணுவ உதவி என அடுத்தடுத்து தனது நாட்டின் நலனுக்காக அதிரடியாக செயல்பட்டு வருகிறார். இது பிற நாடுகளுக்கு மிகப்பெரிய அளவிலான பொருளாதார பிரச்சனைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதேநேரத்தில், டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்லும் ஏற்றுமதி பொருட்களுக்கும் அதிக வரி விதிக்கப்பட்டு வருகிறது. ட்ரம்பின் செயல்பாடுகள் இந்திய பங்குசந்தையிலும் மறைமுக / நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. Unnatural Sex By Husband Not Offence: மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமல்ல.. சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு..! 

PM Modi US Visit 2025 (Photo Credit: @ANI X)
PM Modi US Visit 2025 | Landed at Washington DC Airport (Photo Credit: @ANI X)

அமெரிக்காவில் பிரதமர் மோடி 2 நாட்கள் அரசுப்பயணம்:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் (PM Modi France Visit) நாட்டில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப (Global Artificial Intelligence Summit France 2025) உலகளாவிய மாநாட்டுக்கு சென்றிருந்தார். அங்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் (France President Emmanuel Macron) சந்திப்பு நடத்தி, இரண்டு நாடுகளின் நட்புறவு, முதலீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர், 2 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா (Prime Minster Modi America Visit) சென்றார். அமெரிக்காவில் உள்ள வாஷிங்க்டன் (Washington) விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு (PM Narendra Modi), அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் துளசி கார்னட் (Director of National Intelligence Tulsi Gabbard) சார்பில் அரசு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இந்திய மக்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பின் துளசி கார்னட்டுடன் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த பயணத்தில் இந்தியா - அமெரிக்கா நட்புறவு (India America Friendship), முதலீடுகள் விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ள பிரதமர், அமெரிக்காவின் அமைச்சரவை உறுப்பினர்கள், தொழிலதிபர்களையும் நேரில் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், எலான் மஸ்க்கையும் (Elon Musk) அவர் நேரில் சந்திப்பார் என தகவல் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் பிரதமர் நரேந்த்திர மோடிக்கு வழங்கப்பட்ட வரவேற்பு:

வாஷிங்டனில் உள்ள இந்தியர்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருந்த காட்சிகள்:

பிரதமர் மோடி அமெரிக்காவில் இறங்கும் காட்சிகள்: