ஜூலை 25, மாஸ்கோ (Russia News): உலகெங்கும் LGBTQ சமூகத்தினராக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் தன்பாலின, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்தோர், பல நாடுகளின் அங்கீகாரம் கேட்டு போராடி வருகின்றனர். சில நாடுகள் அவர்களின் செயல்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால், இந்திய இவ்விவகாரத்தில் எவ்வித நிலைப்பாட்டையும் தற்போது வரை எடுக்கவில்லை. இதனால் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களை அங்கீகரிக்க கோரி, நூதன முறைகளில் தங்களின் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று சீனாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்தோர், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குழந்தையை தத்தெடுக்க தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. அதேபோல, அவர்களின் அணிவகுப்பு நடவடிக்கைகளுக்கும் தடை விதித்தது. IRCTC Down: இரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் செயலி, இணையம் முடங்கியது; டிக்கெட் முன்பதிவு செய்ய வழிமுறைகள் இதோ.!
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பாலின மாற்று அறுவைசிகிச்சை, அதுசார்ந்த நடவடிக்கைகள் மற்றும் மாற்றுப்பாலினம் கொண்டவர்கள் குழந்தைகளை ரஷியாவில் தத்தெடுப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறார்.
பாலின மாற்று அறுவை சிகிச்சை, அது சார்ந்த ஹார்மோன் சிகிச்சைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதனால் ரஷியாவில் தற்போது வரை பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்தோரின் பாலின அடையாளம் தொடர்பான விவகாரம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.