IRCTC Logo | Indian Railways (Photo Credit: Wikipedia)

ஜூலை 25, புதுடெல்லி (Technology News): மத்திய இரயில்வே அமைச்சகம் தனது பயனர்கள், பயணச்சீட்டை முன்பதிவு செய்ய ஏதுவாக IRCTC செயலியை உருவாக்கி இருக்கிறது. இந்த செயலியின் வாயிலாக இந்திய இரயில்வே பயணசீட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான பயனர்கள் நேரடியாக iRCTC செயலியின் மூலமாக தங்களின் பயணசீட்டுகளை பயண நேரங்களில் முன்பதிவு செய்கின்றனர்.

இந்நிலையில், இன்று பயனர்கள் IRCTC செயலி மற்றும் இணையப்பக்கத்தின் தொழில் நுட்ப கோளாறு காரணமாக, பயணசீட்டுகளை முன்பதிவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய IRCTC தொழில்நுட்ப குழுவினர் முயற்சித்து வருகின்றனர். Lightning Attack Video: நொடிக்கும் குறைவான வேகத்தில் குடியிருப்பு பகுதியை தாக்கிய மின்னல்; அதிஷ்டத்தால் உயிர்தப்பிய இளைஞர்.. பகீர் வீடியோ வைரல்.!

IRCTC (Photo Credit: Wikipedia)

இந்த தகவலை உறுதி செய்துள்ள IRCTC நிர்வாகம், தனது ட்விட்டர் பக்கத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், இரயில்வே பயணிகள் https://www.irctchelp.in/ask-disha-irctc/ என்ற இணையப்பக்கத்திற்கு சென்று முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

IRCTC இணையப்பக்கத்திற்கு சென்று Try Booking in Ask DISHA என்ற பக்கத்திற்கு சென்று, Book Ticket என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின் நமது செல்போன் நம்பருக்கு பெறப்படும் OTP-ஐ உள்ளிட்டு நமது புறப்படும், சேரும் இடங்களை தேர்வு செய்து இரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் .இ-வாலாட்ட வைத்துள்ளவர்கள் இதில் எளிதில் முன்பதிவு செய்யலாம்.