Vladimir Putin (Photo Credit: Instagram)

அக்டோபர் 27, மாஸ்கோ (World News): உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் முடிவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்தாலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.

இதனால், தற்போது அங்கு போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனை தன்னிடம் சரணடைய சொல்லி ரஷ்ய அதிபர் தாக்குதல் நடத்தும் நிலையில், எப்படியாவது ஐரோப்பிய யூனியுடன் தாம் இணைந்து விட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாகவும், அவர் தனது வீட்டின் படுக்கை அறையில் மயங்கி நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாகவும் செய்திகள் வெளியான. Gujarat Shocker: ஓரினசேர்க்கை உறவில் இருந்து விலக நினைத்த நண்பர் கொலை; இளைஞர் கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.! 

இந்த நிலையில், அவர் இறந்து விட்டதாக டெலிகிராம் குழு ஒன்றில் தகவல் பரவியுள்ளது. இதனை முற்றிலுமாக மறுத்துள்ள அதிபரின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவ் (Dmitry Peskov), இது அபத்தமான தகவல் எனவும் கூறியுள்ளார். அதிபர் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தன்னை பொதுவெளியில் காண்பித்துக் கொண்ட ரஷிய அதிபர், சீனா மற்றும் தனது நாட்டில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்குலக ஊடகங்கள் எப்போதும் அமெரிக்காவுக்கு சாதகமாக பல்வேறு விஷயங்களில் செயல்படும் என்பது உலகறிந்த உண்மை என்பதால், ரஷியாவின் வீரர்கள் மற்றும் மக்களிடையே பதற்ற உணர்வை ஏற்படுத்தவே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் எனவும் கூறப்படுகிறது.