Vladimir Putin - Volodymyr Zelenskyy (Photo Credit: Wikipedia)

ஜனவரி 20: கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா உக்ரைன் நாட்டின் மீது (Russia Ukraine War) படையெடுத்து சென்றது. உக்ரைன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாதுகாப்பு விஷயங்களில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா போர் தொடுத்தது. ரஷியாவின் எதிர்ப்பை கேட்காத உக்ரைன் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இணைந்து நேட்டோ படைகளில் (NATO Forces) தன்னை இணைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறது.

உக்ரைன் நேட்டோ படைகளில் தன்னை இணைத்துக்கொண்டால், எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் (America & Europe) ரஷ்யா மீது படையெடுத்து வந்தால், உக்ரைனில் இருந்து ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவை அழிக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் உக்ரைனின் செயல்பாட்டுக்கு ரஷியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. Son Suicide Present Of Parents: ஓயாது சண்டையிட்ட பெற்றோர்கள்.. 19 வயது மகன் கண்டித்தும் கேட்காததால், பெற்றோர் கண்முன் உயிரைவிட்ட மகன்.!

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) தலைமையிலான இராணுவம் தொடர்ந்து உக்ரைனின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி அந்நாட்டை கைப்பற்ற முயற்சிக்கிறது. இதற்கிடையில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிடம் இருந்து இராணுவ ரீதியான உதவிய பெரும் உக்ரைன், பதில் தாக்குதலும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள டேவிஸ் நகரில் நடைபெற்ற World Economic Forum நிகழ்ச்சியில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) பேசும்போது, "ஹெலிகாப்டர் விபத்துக்கு பின்னர் ரஷ்ய அதிபர் பதில்கள் தெரிவித்ததாக நான் அறியவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா? இராணுவ ரீதியான உத்தரவு மற்றும் பதில்கள் யாரிடம் இருந்து வருகிறது என்பது தெரியவில்லை" என பேசியுள்ளார். இது உலகளாவிய அரசியல் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 20, 2023 09:38 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).