Kundrathur Suicide Case Balakrishnan (Age 20)

ஜனவரி 19, குன்றத்தூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் (Kundrathur, Kanchipuram), மணிகண்டன் நகரில் வசித்து வருபவர் பிரபாகரன். இவர் கூலித்தொழிலாளி ஆவார். பிரபாகரனின் மனைவி கங்கையம்மாள். தம்பதியின் மகன் பாலகிருஷ்ணன் (வயது 19). இவர் கோவூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.

பிரபாகரன் கடந்த 15 நாட்களாக வேலைக்கு சென்று வராமல் இருந்துள்ளார். இதனால் கங்கையம்மாள் கணவரை கண்டித்து இருக்கிறார். இது தம்பதியிடையே குடும்ப தகராறை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரின் சண்டையை (Parents Fight Present of Son) விரும்பாத மகன் பாலகிருஷ்ணன், இருவரையும் சமாதானப்படுத்தி வந்துள்ளார்.

மகனின் மனநிலையை புரிந்துகொள்ளாத பெற்றோர், பாலகிருஷ்ணன் முன்பே தொடர்ந்து சண்டையிட்டுள்ளனர். நேற்று இரவும் சண்டை நடந்துள்ளது. இதனால் மனவேதனையடைந்த பாலகிருஷ்ணன், பெற்றோரை மிரட்ட வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன்னைத்தானே குத்தி தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார். Mother Killed 2 Babies: பிறந்து சில நாட்களேயான குழந்தைகளை கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட தாய்?.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!

இதனை ஒரு பொருட்டாக எடுக்காத பெற்றோர் மகனின் முன்பே சண்டையிட, திடீரென ஆவேசமடைந்த பாலகிருஷ்ணன் கத்தியால் தனது மார்பில் குத்தி சரிந்து விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், மருத்துவமனையில் பாலகிருஷ்ணனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு பதறிப்போன பெற்றோர், தங்களின் சண்டையால் மகன் இறந்துவிட்டானே என கதறியழுதனர். இதுகுறித்து குன்றத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 19, 2023 10:30 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).