Russian President Vladimir Putin (Photo Credit: Instagram)

செப்டம்பர் 17, மாஸ்கோ (World News): ரஷ்யாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை (Birth Rate) அதிகரிக்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin), வேலை செய்யும் இடத்தில், மதிய உணவு மற்றும் காபி இடைவேளையின் போது உடலுறவு கொள்ளுமாறு ரஷ்யர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ரஷ்யாவின் தற்போதைய கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு தோராயமாக 1.5 குழந்தைகளாக உள்ளது. இது மக்கள்தொகை (Population) நிலைத்தன்மைக்கு தேவையான 2.1-க்கும் குறைவாக உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக நாட்டின் மக்கள்தொகை குறைந்துள்ளது.

பிறப்பு விகிதம்:

இந்நிலையில், ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் டாக்டர் யெவ்ஜெனி ஷெஸ்டோபலோவ் கூறுகையில், இனப்பெருக்கத்திற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது. குடும்ப விரிவாக்கத்திற்காக மதிய உணவு மற்றும் காபி இடைவேளையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், வேலை இடைவேளையின் போது இனப்பெருக்கத்தில் (Reproduction) ஈடுபடலாம் எனவும் அவர் தெரிவித்தார். Verizon Layoffs: வெரிசோன் நிறுவனம் 5,000 பேரை பணிநீக்கம் செய்கிறதா..? ஊழியர்கள் அதிர்ச்சி..!

ஊக்கத்தொகை:

ரஷ்யாவின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது. மாஸ்கோவில் (Moscow), 18 முதல் 40 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் திறனை மதிப்பிடுவதற்காக இலவச கருவுறுதல் திரையிடல்களில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர். ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் (Chelyabinsk) பகுதியில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் அதிகாரிகள் ஊக்கத்தொகையை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும், 24 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு முதல் குழந்தை பிறந்தவுடன் 1.02 லட்சம் ரூபிள் வழங்கப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ 9.40 லட்சம் ஆகும்.

பிறப்பு விகிதம் குறைவு:

இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ரஷ்யா 2024-ஆம் ஆண்டு முதல் பாதியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை பதிவு செய்துள்ளது. ஜூன் மாதத்தில், பிறப்புகள் முதல் முறையாக ஒரு லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாத இடையில், ரஷ்யாவில் மொத்தம் 5,99,600 குழந்தைகள் பிறந்துள்ளன. இது கடந்த 2023-ஆம் ஆண்டின் பிறப்பு எண்ணிக்கையை விட 16,000 குறைவாகும்.