மே 16, பெயிஜிங் (World News): ரஷியாவில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் மீண்டும் பெருவாரியான ஆதரவுடன் வெற்றிபெற்ற விளாடிமிர் புதின் (Vladimir Putin), மீண்டும் ரஷிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் அவரின் பதவி பொறுப்பேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. உலகளவில் உக்ரைன் (Ukraine Russia War) போருக்கு பின் அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் பல சோதனைகளை ரஷியா கடந்தாலும், தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் உறுதுணையாக இருந்து செயலாற்றி வருகிறது. Missing Man Found Alive After 26 Years: 26 ஆண்டுகளுக்கு பின் பாதாள சிறையில் இருந்து மீட்கப்பட்ட நபர்; சூனியம் வைத்ததாக நடந்த கொடுமை.! 

ரஷிய அதிபருக்கு உற்சாக வரவேற்பு: இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டு நாட்கள் (Russian President China Visit) அரசுமுறை சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ளார். சீனா சென்றுள்ள ரஷிய அதிபருக்கு, அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் (Xi Xiping) உற்சாக வரவேற்பு அளித்தார். அதனைத்தொடர்ந்து, ரஷிய அதிபருக்கு தனது நாட்டின் அமைச்சரவை உறுப்பினர்களை ஜி ஜின்பிங் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து இருவரும் பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபடவுள்ளனர்.

பலகட்ட ஆலோசனைகளில் இருநாட்டு தலைவர்கள்: இந்த ஆலோசனையில் தொழில் & உயர் தொழில்நுட்பம், விண்வெளி, அணுசக்தியின் அமைதியான பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளின் எதிர்கால கூட்டாண்மை வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அதேபோல, உக்ரைன் போர், காசா போர் நிலைப்பாடுகள் குறித்தும் விவாதிக்கவுள்ளனர். அமெரிக்காவுக்கு எதிராக பனிப்போர் செய்து வரும் சீனா, ரஷிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு மேற்கு நாடுகளுக்கு லேசான கலக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கலாம் என உலக அரசியல் தெரிவிக்கிறது.