Algeria Missing Man Omar Bin Omran (Photo Credit: @CureBore X)

மே 16, அல்ஜீரஸ் (World News): அல்ஜீரியா நாட்டில் உள்ள ஜெல்பா மாகாணத்தை சேர்ந்த நபர் உமர் பின் ஒம்ரான் (வயது 45). இவர் கடந்த 1998ம் ஆண்டு மாயமாகி இருக்கிறார். இதனால் அவர் இறந்துவிட்டதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் நினைத்துள்ளனர். மேலும், 1998ம் ஆண்டுகளில் அங்கு அல்ஜீரிய அரசுக்கும் - இஸ்லாமிய கிளர்ச்சி குழுவுக்கும் இடையே உச்சகட்ட உள்நாட்டு போர் நடைபெற்றது என்பதால், போரில் மகன் இறந்து இருக்கலாம் எனவும் நம்பப்பட்டுள்ளது. RR Vs PBKS Highlights: ராஜஸ்தானின் பந்துகளை பஞ்சபஞ்சாய் பறக்கவிட்ட சாம் கரண்; அசத்தல் ஆட்டத்தால் பஞ்சாப் வெற்றி.! 

பாதாள சிறையில் 26 ஆண்டுகள் வாழ்க்கை: இதனிடையே, சமீபத்தில் உமரின் பெற்றோர் வசித்து வந்த வீட்டில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள உறவினரின் வீட்டில் இருந்து உமர் பின் உயிருடன் மீட்கப்பட்டார். கடந்த 25 ஆண்டுகளாக அவர் இருட்டான பாதாள அறையில், வைக்கோல் போருக்கு அடியில் உள்ள பகுதியில் அடைத்து வைக்கப்பட்டவர், தற்போது அந்நாட்டு அதிகாரிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதி செய்ய்யப்ட்டுள்ளார். Unemployment Rate was Declines: இந்தியாவின் நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 6.7% குறைவு; ஆய்வில் வெளியான தகவல்.! 

உளவியல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு: 17 வயதில் மாயமான மகன் 45 வயதில் உயிருடன் வந்ததை எண்ணி பெற்றோர் மகிழ்ந்தாலும், சூனியம் வைத்ததாக சந்தேகித்து பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர் செய்த காரியம் அவர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக நிலத்தடி சுரங்கத்தில் மறைத்து வைக்கப்பட்டு வந்த உமருக்கு உளவியல் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உமர் மீட்கப்பட்ட பதறவைக்கும் காட்சிகளும் உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளன.

உமரை பிடித்து அடைத்து வைத்ததாக 61 வயதுடைய நபர் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு இருக்கிறார். சர்ச்சைக்குரிய 61 வயது நபர் நகராட்சி அலுவலகத்தில் ஊழியராகவும் வேலை பார்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.